இதை டெல்லியில் போய் சொல்வாரா! ஸ்டாலின் முதல்வர் அவர்களுக்கு கேள்வி!

0
55

டெல்லி போராட்டக் களத்தில் போராடிக் கொண்டிருப்பவர்களை தரகர்கள் என்று தெரிவிப்பாரா முதல்வர் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நேற்று முன்தினம் கரூர் மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், வேளாண் சட்டங்கள் தொடர்பாக, விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளைபொருட்களை தரகர் மூலமாக தான் விற்பனை செய்ய இயலும் அந்த தரகர்கள் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த தரகர்களுக்கு துணையாக தான் இங்கே இருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் விவசாயிகளுக்காக இல்லை என்று விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையிலே, தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில், இரண்டாம்கட்ட காணொளி பிரச்சாரத்தை மேற்கொண்டுவரும் திமுகவின் தலைவர் ஸ்டாலின், கடலூர் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் காணொளி மூலமாக பங்கேற்று உரையாற்றினார்.

அந்த உரையில், இதுவரையில் வேளாண் சட்டங்களை ஆதரித்து வந்த எடப்பாடி பழனிச்சாமி, இப்போது விவசாயிகளையே அவமானப்படுத்தும் ஆரம்பித்து இருக்கின்றார். 3 வேளாண் சடங்களை எதிர்த்து போராட்டம் செய்பவர்களை ஏஜெண்டுகள் என்று தெரிவித்திருக்கின்றார் முதல்வர் பழனிசாமி. இதைவிட விவசாயிகளை அசிங்கப்படுத்த இயலுமா, கேவலப்படுத்த இயலுமா, என்று தெரிவித்தார்.

இவர்தான் வெல்லமண்டி தரகராக இருந்தார். விவசாயி வேடம் போடும் காரணத்தால், உண்மையான விவசாயிகள் எல்லாம் தரகர்களாக தான் தெரிகிறார்கள் போல. டெல்லியில் போராட்டம் நடத்தி வருபவர்கள் தரகர்கள் என்று தெரிவித்தார், டெல்லியில் போய் தெரிவிப்பதற்கு முதல்வருக்கு தைரியம் இருக்கின்றதா? எனவும் கேள்வி எழுப்புகின்றார்.

தொடர்ச்சியாக உங்களுடைய பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ்நாட்டு மக்களை அடமானம் வைத்திருக்கிறீர்கள். அதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது, எந்த அருகதையும் கிடையாது, என நாட்டு மக்கள் உங்களுக்கு உணர்த்த போகும் தேர்தல் தான் எதிர்வரும் தேர்தல் என்று தெரிவித்தார் ஸ்டாலின்.

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார் என எங்கள் வீட்டுப்பிள்ளை திரைப்படத்தில் எம்ஜிஆர் பாடியிருக்கின்றார். இந்த பாடல் இப்போது இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொருந்தும், அவருடைய ஆட்டத்தை முடிக்கும் தேர்தல் இதுதான் என்று அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அவர்களுடைய பாடலையே சுட்டிக்காட்டி பேசி இருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர்.