உப்பூர் அனல் மின் நிலையத்தை எதிர்த்து போராடிய வழக்கறிஞர் தீரன் திருமுருகன் கைது

0
143
Theeran Thirumurugan-News4 Tamil Latest Online Tamil News Today
Theeran Thirumurugan-News4 Tamil Latest Online Tamil News Today

உப்பூர் அனல் மின் நிலையத்தை எதிர்த்து போராடிய வழக்கறிஞர் தீரன் திருமுருகன் கைது

ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் 543 ஹெக்டேர் நிலப்பரப்பில் தலா 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரு அனல் மின்நிலையங்களை அமைக்க தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த அனல் மின்நிலைய கட்டுமான பணிகளுக்கு தடை கோரி அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ‘கால்வாய்களை மூடி அதில் அனல் மின்நிலையம் அமைத்து, விவசாயத்தை அழிக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. அனல் மின்நிலையம் அமைப்பதற்கு முன்பு பொதுமக்களின் கருத்துகளை கேட்கவில்லை. எனவே, அனல் மின்நிலையம் அமைக்கும் பணிக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் பகுதியில் அரசு சார்பில் அமையவுள்ள இந்த அனல் மின் நிலையத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர். இந்த அனல் மின் நிலையத்திற்காக கடல் நீரை குழாய் மூலம் எடுத்து, அதை பயன்படுத்திய பின்னர் சுத்திகரித்து மீண்டும் கடலில் விடும் வகையில் உயர் மட்டப்பாலம் அமைக்கப்படுகிறது. ஆனால், இந்த பாலத்தால் மீன்பிடிக்க முடியாது என்றும், கடலில் விடப்படும் சுடுதண்ணீரால் மீன் வளம் பாதிக்கும் என்றும் கூறி, உப்பூர், மோர்ப்பண்ணை, திருப்பாலைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்களும்,விவசாயிகளும் மீனவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வந்ததாக கூறப்படும் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள தெரிவிக்கின்றன. இது குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

அரசு அடக்குமுறையும் நானும்.

பல கட்டப் போராட்டங்கள் மூலம் தமிழகம் முழுக்க போராடிக் கொண்டிருக்கிறோம் அந்த வகையில் என் மீது எந்த மாவட்டத்தில் எந்த காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வார்கள் என எமக்கு தெரியாது

இச்சூழலில் உப்பூர் அனல் மின்நிலைய போராட்டத்தைப் பற்றி பெரும்பாலும் தமிழக மக்களுக்கு தெரிய வாய்ப்பு மிகக்குறைவே ஏனெனில் கூடங்குளம் போராட்டத்தை பற்றியோ நெடுவாசல் போராட்டத்தைப் பற்றியோ கதிராமங்கலம் போராட்டத்தை பற்றியோ ஸ்டெர்லைட் போராட்டத்தைப் பற்றியோ தமிழக மக்களுக்கு தெரியவரும்

ஏனெனில் மேற்குறிப்பிட்ட பிரச்சனை 30 40 ஆண்டுகால பிரச்சனை அனைத்துப் போராட்டங்களும் அந்தந்த பகுதியில் நிறுவப்பட்டு அது முழுமையான பிறகே போராட்டங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பெற்றது

இந்த நிலையில் தமிழ்நாட்டிலேயே அமைக்கப்பட்ட அனல் மின் நிலையத்திலேயே மிகப்பெரிய அனல் மின் நிலையத் திட்டம் உப்பூரில் 2013 இல் தொடங்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டு கடற்கரை ஓரத்தில் பாலம் கட்டுவதற்கான அமைப்பு தொடங்கப்பட்டு சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் பாலம் கட்டப்பட்டு வருகிறது..

ஆனால் 2013 இல் இருந்து நாம் அந்த சுற்றுவட்டார மக்களை ஒன்று திரட்டி கடலும் கடல் சார்ந்த மக்களையும் நிலமும் நிலம் சார்ந்த மக்களையும் கடல் வளமும் விவசாயமும் பாதிக்க பட போகும் சூழ்நிலை உள்ளது என்று கூறி கடுமையான முறையில் அரசு நெருக்கடிக்கு மத்தியில் நாம் வீதி வீதியா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் பொதுக்கூட்டம் போராட்டம் என ஒரு ஆறு ஆண்டுகளாக செய்து வந்தோம்..

இதனுடைய நீட்சி தற்போது மோர் பண்ணை கிராமத்திற்கும் நம்புதாளை மீனவ கிராமம் புதுப்பட்டினம் மீனவ கிராமம் காரங்காடு மீனவ கிராமம் திருபாலைகுடி மீனவ கிராமம் ஓலைக்குடா மீனவ கிராமம் இன்னும் எண்ணற்ற மீனவர்களை ஒருங்கிணைத்து ஒரு மிகப்பெரிய வெகுமக்கள் திரள் போராட்டம் உப்பூர் அனல் மின் நிலையத்திற்காக கடலில் கட்டப்படுகிற ஏழு கிலோமீட்டர் பாலத்தை கட்ட விடாமல் கடற்கரையோர மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்

அந்த வகையில் பாலம் கட்டப்பட்டால் கடுமையான முறையில் மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் முழுதும் அனல்மின் நிலைய கழிவுகளால் அந்த சுற்றுவட்டார கடற்கரை கிராமங்கள் முற்றிலும் பாதிப்படையும் என்றும்,

உலகில் அனல்மின் நிலையத்தால் மிகப் பெரிய பாதிப்பு உண்டு என இயற்கை நலன்கருதி ஜெர்மனி இத்தாலி ஜப்பான் பிரேசில் கனடா இங்கிலாந்து போன்ற நாடுகள் அணு மின் நிலையத்தை மூடிவிட்டு மின்சார உற்பத்திக்கு மாற்று வழியைத் தேடிக் கொண்டுருக்கின்ற வேளையில்

ஆனால் நமது இந்திய ஒன்றியத்தில் மின்சார தேவையை பூர்த்தி செய்ய பல வழிமுறைகள் இருந்தாலும் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் மிகவும் நாசகார தொழிலாகக் கூடிய அனல்மின் நிலையத்தை இங்கே நிறுவுவதற்கு இந்திய ஏகாதிபத்திய அரசு முடிவு செய்கிறது அதனை மாநில அரசு இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்காது தமிழக அரசு இந்த அழிவு திட்டத்தை வரவேற்கிறது..

இதனால் விவசாய நிலமும் கடல் வளமும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் எனக் கூறி உப்பூர் அனல் மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழு சார்பாக போராடி வந்தோம் இந்நிலையில் மீனவ மக்களும் ஒன்றுகூடி இந்த போராட்டத்தை அனல் மின்நிலையம் வேண்டாம் என கடுமையாக ஓரணியில் போராடி வருவதால் அரசு பயங்கரவாதம் இந்த போராட்டத்திற்கு யார் தலைமை தாங்குகிறார்களோ அவர்களை சிறை படுத்துவதற்கு முயற்சி செய்து வருகிறது..

இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக திருவாடனை வட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையில் என்னை சிறை படுத்துவதற்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது…

யாரிடம் புகார் பெறுவது எந்த மாதிரியான வழக்கு வழக்கறிஞர் தீரன் திருமுருகன் மீது போடுவது என மூன்று நாட்களாக அவர்களுக்குள்ளேயே பெரும் குழப்பம் ஏற்பட்டு உப்பூர் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனு கேட்டுள்ளார்கள் உப்பூர் கிராம நிர்வாக அலுவலர் பலத்த யோசனைக்கு நடுவே கொடுக்க மறுத்துள்ளார்

உடனடியாக மாவட்ட துணை கண்காணிப்பாளர் மாவட்ட கிராம நிர்வாக சங்க தலைவரிடம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் அவர் மீது புகார் கொடுக்கச் சொல்லுங்கள் இது அரசு உத்தரவு என கிராம நிர்வாக சங்க தலைவரிடம் dsp கூற ..கிராம நிர்வாக சங்க தலைவர் இதற்கெல்லாம் நாங்கள் ஆதரவு தர முடியாது நீங்கள் வேண்டுமானால் உங்கள் காவல்துறை ஆட்களை தேர்வு செய்து புகார் மனுவை பெற்று அவர் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என கறாராக கூறி உள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத திருவாடானை மாவட்ட துணை கண்காணிப்பாளர் புகழேந்தி அவர்கள் இதை மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்ல மாவட்ட ஆட்சித்தலைவர் கிராம நிர்வாக அலுவலரை கூப்பிட்டு நீங்கள் காவல்துறை சொல்லுவதை கேளுங்கள் என உத்தரவு பிறப்பிக்க இன்றைய தகவல் உப்பூர் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனுவில் கையொப்பம் வாங்கி உள்ளார்கள்.

எம் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு முதல் ஆறு மாத காலமாவது என்னை சிறைப்படுத்த வேண்டும் என அவர்களுடைய திட்டம் இந்த திட்டத்தை மிக ரகசியமாக வைத்து என்னை அவதானித்து கண்காணித்து வருகிறார்கள்.

எது எப்படியோ ஒரு ஒடுக்கு முறையிலிருந்து தான் ஒரு இனத்தின் விடுதலை பிறக்கும் தற்போது தான் எங்கள் பகுதியில் அதுவும் குறிப்பாக கடற்கரையோர கிராம மக்கள் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள் விவசாய பெருமக்களும் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள்

இந்த மருதமும் நெய்தலும் இணைந்தால் இந்த நாசகார திட்டமும் இந்திய ஏகாதிபத்தியமும் இங்கே கொண்டு வர இயலாது என்பதே உண்மை கடலும் கடற்கரையும் சார்ந்த திட்டங்களை கொண்டு வாருங்கள் வயலும் வயல் சார்ந்த திட்டங்களை கொண்டு வாருங்கள் அதுவே தமிழருடைய தற்சார்பு பொருளாதாரம் ஆகும் அதை விட்டுவிட்டு எவனோ ஒரு அந்நிய கார்ப்பரேட் கம்பெனி மூலம் ஒரு எரிசக்தித்துறை ஏற்படுத்தி அதன் மூலம் இங்கு மின்சாரத்தை தயாரித்து எவனோ ஒரு வளர்ச்சி நாடுகளுக்கு நீங்கள் கொடுப்பது தவறான காரியம்.

இந்த அனல் மின் நிலைய திட்டம் வந்தால் 30 ஆண்டுகளில் குளம் போல் உள்ள இந்த கடற்கரையோரத்தில் அனல் மின் நிலையம் அமைந்தால் மாபெரும் பேரழிவு நிகழும் அது மட்டுமல்லாமல் அனல் மின் நிலைய கழிவுகள் முற்றிலும் அழிய சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளாகுமாம் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன ..

இந்த நிலையில் என் கண்முன்னே என் மக்கள் அழிவதை எப்படி என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியும் இதை தடுப்பதற்கான அனைத்து சட்டபூர்வ நடவடிக்கையும் வெகுமக்கள் திரள் போராட்டமும் நாங்கள் நடத்தினால் எங்களை சிறைப்படுத்த இந்த பயங்கரவாத அரசு துடிக்கிறது

நீங்கள் எத்தனை முறை பிடித்தாலும் ஒடிக்கினாலும் நான் என் மக்களுக்காக போராடியே வருவேன்

நான் காவல் துறைக்கு வைக்கக்கூடிய ஒரே கோரிக்கை என்னவென்றால்..

நீங்கள் என் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு எங்கே இருந்து உத்தரவு வரும் எமக்கு ஓரளவு தெரியும்.
அதை நடைமுறைப் படுத்திக் கொள்ளுங்கள் ஏனெனில் நீங்கள் 200 ஆண்டுகளாக ஆங்கிலேயரிடம் அடிமையாக வேலை பார்த்து வருகிறீர்கள் ஓலந்து பிரஞ்சு டச்சு போச்சு கீசியர்களிடம் அடிமையாக வேலை பார்த்தீர்கள் தற்போது திராவிட வடுக கூட்டத்திடம் அடிமையாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் எந்த இடத்திலும் தமிழர்களுக்காக நின்றதாக வரலாறு இந்த அறநூறு ஆண்டுகளில் குறிப்பிடவே இல்லை அண்ணியனுக்கு வேலை பார்த்து பார்த்து பழகிப் போன ஓர் இனமாக தமிழர்கள் இருக்கிறார்கள் இது நல்லது இது கெட்டது என முடிவெடுக்கக் கூடிய திறன் உங்களுக்கு இருந்தும் கிடையாது.

நீங்கள் ரோபோ போல் வேலை செய்து வருகிறீர்கள் நீங்கள் வைத்துருக்க கூடிய கம்பு துப்பாக்கி சமூக சீரழிவு கலாச்சார பண்பாட்டு சிதைவு கூலிப்படை மூலம் மக்களை பிரிப்பது மதம் மூலம் மக்களை பிரிப்பது ஒரு மிகப்பெரிய மிருக குணம் கொண்டு அப்பட்டமாக மக்களை கொன்று குவிப்பது அவர்களை அடிப்பதற்கும் அவர்களை சுடுவதற்கும் தானே தவிர

மிகப்பெரிய நாசகார திட்டங்கள் இந்த மக்கள் மீது திணிக்கப்பட வேண்டாம் என ஒரு புரட்சியாளன் கிளம்பி மக்களுக்காக போராடினால் அவனை சுடுவதும் அவனை கொடுமைப்படுத்துவது மட்டுமே உங்களுடைய பணியாக இங்கே அமைகிறது

அதுபோல கெட்டவர்களை அடிப்பதற்கும் சுடுவதற்கு தான் அந்த கம்பும் துப்பாக்கியே தவிர” மக்களுக்காக போராடுபவர்களுக்கு அல்ல ஆனால் இங்கே தவறாக கற்பிக்கப்பட்டு மக்களுக்காக போராடுபவர்கள் சுடவும் அடிக்கவும் நீங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது பேசாம நாம ஒரு ரோபோவா இருந்துட்டு போயிடலாம் ரத்தமும் சதையும் உள்ள மனிதர்களாக நாம் ஏன் இருக்க வேண்டும் ஆறறிவு படைத்த மனிதனாக இருக்கிறோம் நமக்கும் கண் காது மூக்கு வாய் அனைத்தும் உண்டு உணர்வுகளும் உண்டு அந்த உணர்வுகளை அடக்கிக் கொண்டு எப்படி நல்லவர்களை அடிப்பதற்கும் ஒடுக்குவதற்கும் உங்களுக்கு மனசாட்சி வருகிறதோ எது எப்படியோ இந்த மாதிரி அடக்குமுறை என் மீது திணித்தால் நான் எதிர்கொள்ள தயார் ….

எமது கரையோர மக்களுக்கு விவசாய மக்களுக்கும் நான் கூறிக் கொள்வது என்னவென்றால் ”””

என்னை சிறை பிடித்து விட்டார்கள் என நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம் உங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள் உங்களுக்குள் இருக்கிற முரண்பாடுகளை களைந்து ஒற்றுமையுடன் செயலாற்றுங்கள் நமக்கு கட்சிகள் அப்பாற்பட்டு சாதிகள் அப்பாற்பட்டு மீனவனாகவும் விவசாயிகளாகவும் அணி திரள்வோம் நாம் ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகளாக ஒன்றுபடுவோம் தமிழர் என்று பெருமிதம் கொள்வோம் என்றும் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் காவல் துறையினரால் கைது செய்யபட்டுள்ளதாகவும்,தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

author avatar
Ammasi Manickam