டிகிரி முடித்தவர்களுக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

0
76

பிரபலமான காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது, தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

1) நிறுவனம்:

அழகப்பா பல்கலைக்கழகம்.

2) இடம்:

அழகப்பாபுரம், காரைக்குடி.

3) வேலை வகை:

தற்காலிகமாக பணிநியமனம்.

4) காலி பணியிடங்கள்:

மொத்தம் 06 காலி பணியிடங்கள் உள்ளது.

5) பணிகள்:

Project Fellow

6) கல்வித்தகுதிகள்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பயோடெக்னாலஜி பிரிவில் பி.இ அல்லது பி.டெக் படித்து முடித்திருக்க வேண்டும்.

7) வயது வரம்பு:

Project Fellow பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டியது அவசியம்.

8) சம்பளம்:

Project Fello பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.12,000 சம்பளம் வழங்கப்படும்.

9) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

10) விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி அதனை பூர்த்திசெய்து [email protected] எனும் அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

11) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

13.12.2022

 

author avatar
Savitha