அழகிரி வைத்த அந்த கோரிக்கையால்! ஆடிப்போன ஸ்டாலின்!

0
77

அழகிரி விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ரஜினியுடன் இணைய போகின்றார். பாஜகவுக்கு ஆதரவுக்கு போகின்றார் என்ற செய்தி எல்லாம் தன்னுடைய சொந்த ஆதாயங்களுக்காக அவருடைய தரப்பினரே கிளப்பிவிட்ட வதந்திதான் என்று சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் குடும்ப சொத்து மதிப்பை கேட்டோமானால் அனைவருக்கும் தலை சுற்றும். அந்த சொத்துக்களை கட்சியின் பெயரிலும், முரசொலி பெயரிலும், அறக்கட்டளை உருவாக்கி கருணாநிதி நிர்வாகம் செய்து வந்தார். மொத்த சொத்துக்களின் மதிப்பு 40 ஆயிரம் கோடியை தாண்டும் என்கிறார்கள்.

கருணாநிதி உடைய இறப்பிற்குப் பின்னர் இந்த அறக்கட்டளைகள் எல்லாம் ஸ்டாலின் கைக்கு வந்துவிட்டது. முரசொலி அறக்கட்டளை உதயநிதி முக்கிய பொறுப்பில் இருக்கின்றார். அதேபோல திமுக அறக்கட்டளையில் ஸ்டாலினுடைய வார்த்தையை மீறாத சிலரும் முக்கிய பங்கு வசித்து வருகிறார்கள்.

கருணாநிதி இருந்தபோதே இந்த அறக்கட்டளைகள் ஏதாவது ஒன்றில் தன்னுடைய மகன் துரை தயாநிதியை அமர்த்தி விடலாம் என்று அழகிரி தீவிரமாக முயற்சி செய்து பார்த்தார் ஆனாலும், ஒவ்வொரு முறையும் ஸ்டாலின் இதனை மிகவும் சாதுரியமாக தடுத்துவிட்டார், குடும்ப உறவுகளும் அழகிரி அவர்களுக்கு ஆதரவு கொடுக்காத காரணத்தால், அவரது முயற்சி பலிக்கவில்லை.

அழகிரியின் விவகாரம் இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் குடும்ப உறுப்பினர்கள் சிலர் அவரிடம் சமாதானம் செய்தார்கள் ஆரம்பத்திலே அழகிரி சமாதானத்திற்கு ஒத்து வரவில்லை. என்னை அவமதித்த அவர்களுக்கு நான் யார் என்பதை காட்டிய தீருவேன் என்று உறவுகளிடம் கோபப்பட்டு இருக்கின்றார் அழகிரி. இருந்தாலும் சகோதரி செல்வியின் தளராத முயற்சியும் காரணமாக இப்போது அவர் பிடிவாதத்தை சற்று தளர்த்தி இருப்பதாக தெரிகின்றது.

நான் எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது வேறு கட்சிக்கு ஆதரவு கொடுக்கவில்லை அதேநேரம் என்னுடைய சுய கவுரவத்தை பாதுகாக்கும் வகையிலே கட்சியில் ஏதாவது ஒரு பொறுப்பை கொடுக்க வேண்டும், அதோடு முரசொலி அறக்கட்டளை உதயநிதி இருப்பதுபோல திமுக அறக்கட்டளையில் என்னுடைய மகன் துரை தயாநிதிக்கு இடம் தரவேண்டும். இந்த இரண்டில் ஒன்றை மட்டுமே தருவதாக தெரிவித்தால் துரை தயாநிதிகான பொறுப்பு தான் மிக முக்கியம் இதை முதலில் செய்யட்டும் அப்புறம் மற்றவையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று செல்வியிடம் தெரிவித்திருக்கின்றார் அழகிரி.

அவருடைய இந்த வேண்டுகோளை ஸ்டாலினிடம் செல்வி தெரிவித்திருக்கின்றார். விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகி செனடாப் சாலை வீட்டு கிச்சன் கேபினட் பூகம்பமே வெடித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன