Connect with us

Crime

நிர்வாணமாக மரத்தில் தொங்கிய தனியார் ஊழியர்! கள்ள காதலியின் மகளை அடைய நினைத்ததால் கூட்டு சேர்ந்து செய்யப்பட்ட கொடூர கொலை!

Published

on

Private employee hanging from a tree naked! The brutal murder committed by the gang because they wanted to reach the daughter of a fake girlfriend!

நிர்வாணமாக மரத்தில் தொங்கிய தனியார் ஊழியர்! கள்ள காதலியின் மகளை அடைய நினைத்ததால் கூட்டு சேர்ந்து செய்யப்பட்ட கொடூர கொலை!

கலபுரகி மாவட்டம் கமலாபுரா தாலுகா நவதகி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஆக பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் அவர் நிர்வாண நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

Advertisement

இந்த தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அவர் நிர்வாணமாக தொங்கியதன் காரணமாக அவர் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மர்ம நபர்கள் தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. மேலும் அவரது மர்ம சாவு குறித்து கமலாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் அவர் தற்கொலை செய்யவில்லை என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதும் உறுதியாக தெரிந்தது. மேலும் அவரை கொலை செய்ததாக அதே கிராமத்தைச் சேர்ந்த அனுசியா மற்றும் அவரது கள்ளக்காதலன் சிவகுமார் மற்றும் கோவிந்த் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அனுசுயாவின் கணவர் இறந்துவிட்டார். அதன் பிறகு சித்தப்பாவிற்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

எனவே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதற்கிடையில் சித்தப்பா அவருடைய மகளையும் அடைய விரும்பி உள்ளதன் காரணமாக அனுசியாவுக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் அவருடன் பழகுவதையும் அனுசியா தவிர்த்து வந்துள்ளார். இதற்கிடையே சிவகுமார் என்பவருடன் அவருக்குத் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அந்த சித்தப்பா என்ற நபருக்கு அனுசியா உடன் பழக்கம் தற்போது இல்லை என்றாலும், அவரது மகளை அடைவதை நிறுத்தாமல் முயற்சி செய்துள்ளார்.

இதையடுத்து தன்னுடைய மகளை அடைய முயலும் சித்தப்பாவை கொலை செய்ய அனுசியா மற்றும் புதிய கள்ளக்காதலனான சிவக்குமாருடன் சேர்ந்து திட்டம் போட்டுள்ளார். அவரும் இதற்கு சம்மதிக்கவே அந்த நபரை தோட்டத்திற்கு உல்லாசம் அனுபவிக்க வரும்படி அனுசியா தெரிவித்துள்ளார். அதன்படி அவரும் அங்கே வந்தார். அந்த நேரம் பார்த்து சிவகுமார் இரும்பு கம்பியால் சித்தப்பாவின் பின் பகுதியில் இருந்து தலையில் தாக்கியுள்ளார்.

Advertisement

மேலும் அவரது உடலை நிர்வாணமாக தோட்டத்தின் அருகே உள்ள ஒரு மரத்தில் கட்டித் தொங்கவிட்டதும் தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொலைக்கு சிவகுமார் மற்றும் அனுசுயாவிற்கு கோவிந்த் என்ற நபர் உதவிகளை செய்து கொடுத்ததும் தெரியவந்து உள்ளது. எனவே கைதான 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement