தனியார் கல்லூரிகள் தவணை முறையில் கட்டணங்களை வசூலிக்கலாம்! தமிழக அரசு அனுமதி

0
84

கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தனியார் கல்லூரிகள் கட்டணங்களை வசூலிப்பது குறித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

பள்ளி,கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாத காரணத்தால் கல்விக்கட்டணங்களை வசூல் செய்ய தமிழக அரசு கல்வி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தனர்.

இது குறித்து தமிழக உயர் கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,தனியார் கல்லூரிகள் தவணை முறையில் கல்விக்கட்டணத்தை வசூலிக்க அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.அதன்படி 3 தவணையில் 2020 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் என இரு தவணையும்,மூன்றாவது தவணையை
2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வசூலிக்க அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்த நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K