தனியார் பேருந்து இயக்க திட்டம்! மாணவர்களுக்கு வழங்கும் இலவச பஸ்பாஸ் பாதிக்கப்படும்?

0
163
Private bus project! Free bus pass to students will be affected?
Private bus project! Free bus pass to students will be affected?

தனியார் பேருந்து இயக்க திட்டம்! மாணவர்களுக்கு வழங்கும் இலவச பஸ்பாஸ் பாதிக்கப்படும்?

மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. மேலும் அதன் அடிப்படையில் நடப்பாண்டில் சுமார் 500 பேருந்துகளை இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மாநகர் போக்குவரத்து கழக சார்பில் சென்னையில் மொத்தம் 625 வழித்தடங்களில் 3400 க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதை தொடர்ந்து 31 பனிமனைகளில்  20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். நாளொன்றுக்கு 29 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இதில் பெண்களுக்கு இலவச சேவை, முதியவர்களுக்கு இலவச சேவை, பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்களுக்கு பஸ் பாஸ் மாதாந்திர கட்டண பாஸ் என பயன்களுக்கான வசதிகளை அமல்படுத்தியுள்ளது.

சென்னையை  தவிர மற்ற நகரங்களில் தனியார் நிறுவனங்களின் பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றது. ஆனால் சென்னையில் அரசின் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஏசி உட்பட நான்கு வகை பேருந்துகளை மாநகரப் போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. அதை தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சென்னையில் தனியார்  நிறுவனங்களுக்கும் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்குவது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டபடி சென்னையில் தனியார் நிறுவனங்களின் பேருந்துகள் இயக்கினால்  மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்  வழங்கப்படும் எனவும் அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளார். சென்னையில் தனியார் மாநகர பேருந்து இயக்கப்படும் என்பது தவறான புரிதல் என கூறியுள்ளார்.

இது தொடர்பான நடைமுறைக்கு அரசாணை வெளியிட்டது அதிமுக அரசுதான். தனியார் பேருந்துகளை இயக்கலாமா  என ஆய்வு மேற்கொள்ள ஆலோசகரை தேர்வு செய்யவே டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆலோசகர்களின் அறிவுரை அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்படும். அதனால் வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார். கூடுதலான பேருந்துகளை இயக்கவே தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கினாலும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று குறிப்பிடத்தக்கது. அரசு பேருந்துகளைப் போலவே தான் தனியார் பேருந்தும் இயங்கும் என தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K