தனியார் மயமாக்கப்படும் அரசு நிறுவனம் கலக்கத்தில் ஊழியர்கள்?

0
86

Bsnlக்கு அடுத்தபடியாக ஏர் இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சுமார் ரூ.60 ஆயிரம் கோடி வரை கடன் சுமை இருப்பதால் ஏர் இந்தியாவால் தொடர்ந்து இயங்க முடியவில்லை. 

எனவே ஏர் இந்தியாவின் பங்குகள் முழுவதையும் தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது அதற்கான நடைமுறைகளை மேற்கொண்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் முயற்சி அல்லது விற்பனை செய்யும் முயற்சி தோல்வி அடைந்தால், ஏர் இந்தியா நிறுவனத்தை இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறுகையில், ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் தனியார் மயமாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கூடிய விரைவில் தனியார்மயமாக்க தீவிரமாக முயற்சி செய்கிறோம். எங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், தனியார் மயமாக்கப்பட வேண்டும் என நான் முன்பே கூறினேன். விமானக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் திட்டம் எதுவும் இல்லை’ என்று மத்திய மந்திரி கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.

 

author avatar
CineDesk