தெலுங்கில் டிசாஸ்டர் ஆன சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்… நான்கு நாள் வசூல் இவ்வளவுதானா?

0
122

தெலுங்கில் டிசாஸ்டர் ஆன சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்… நான்கு நாள் வசூல் இவ்வளவுதானா?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தெலுங்கிலும் அதே பெயரில் வெளியானது.

தெலுங்கு இயக்குனர் அனுதீப் மற்றும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் ரிலீஸ் ஆனது.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதையடுத்து ஹாட்ரிக் வெற்றி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்போடு தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இந்த முறை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் ரிலீஸ் ஆனது. இதில் பிரின்ஸ் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ரிலீஸுக்கு பின்னர் நிலைமை தலைகீழாகியுள்ளது.

தமிழ்நாட்டில் படம் இப்போதெ ஈயாட தொடங்கியுள்ளது. பல திரைகளில் பிரின்ஸ் திரைப்படம் தூக்கப்பட்டு சர்தார் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆந்திராவில் முதல் நாளில் இருந்தே இந்த படத்துக்கு சொல்லிக்கொள்ளும் படி வசூல் இல்லை. இந்நிலையில் இப்போது நான்கு நாட்களைக் கடந்துள்ள நிலையில் வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாம். இது படத்துக்கு மிகப்பெரிய இடியாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றப் பட்ட இந்த படத்தை ரிலீஸ் செய்த பின்னர் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்நிலையில் நேற்றோடு தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்துள்ள நிலையில் வசூல் சொல்லிகொள்ளும் படி அமையவில்லை என்று திரைவட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இதனால் விநியோகஸ்தரான அன்புச் செழியனுக்கு 10 கோடி ரூபாய் வரை நஷ்டமாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.