ஹாரி – மேகனுக்கு ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்த இங்கிலாந்து ராணி!!

0
101

ஹாரி – மேகனுக்கு ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்த இங்கிலாந்து ராணி!!

அரண்மனையில் இருந்து ஹாரி – மேகன் தம்பதியனர் அதிகார பூர்வமாக மார்ச் 31 ல் வெளியேறுவதால் ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்துள்ளார் இங்கிலாந்து ராணி.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹாரி- மேகன் தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு சர்வதேச அளவில் பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

டயானாவின் மகனான ஹாரி கடந்த 2018ம் ஆண்டு மேகனை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது, இந்த நிலையில் அரச குடும்பத்திலிருந்து விலகி சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள முடிவெடுத்தனர். இங்கிலாந்து இராணி முதல் அரச குடும்ப உறுப்பினர்கள் வரை சமாதானம் செய்தனர்.

ஆனால் அவர்கள் முடிவை மாற்றமுடியவில்லை. இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் ஆகியோரின் இந்த முடிவால் அரச குடும்பம் கவலையடைந்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிக்கை வெளியிட்டது. இருப்பினும் அவர்களது முடிவுக்கு ராணி அனுமதியளித்தார். கனடாவில் குடியேறும் அவர்கள் சஸ்ஸக்ஸ் ராயல் என பெயரிடப்பட்ட நிறுவனம் ஒன்றையும் அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

சாதாரண வாழ்க்கையை தொடங்கும் ஹாரி – மேகன் தம்பதி மார்ச் 31 தேதி சட்டப்படி பக்கிங்ஹாம் அரண்மனை விவகாரங்களிலிருந்து முழுமையாக வெளியேறுகின்றனர். இந்த நிலையில் 2 பேரும் வரும் வாரத்தில் அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சியில் இறுதியாக பங்கேற்க உள்ளனர்.

காதல் மனைவிக்காக இளவரசர் பட்டத்தையே துறந்த ஹாரிக்கு உலகம்  முழுவதும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

author avatar
Parthipan K