பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை! சென்னையில் போக்குவரத்தில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்!

0
82

கடந்த காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி எப்பொழுது தமிழகத்திற்கு வருகை தந்தாலும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அவருடைய வருகையை மிகக்கடுமையாக எதிர்த்து வந்தது.

ஆனால் அந்த கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் விஷயத்தில் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது. இதை நாம் சற்று உற்று நோக்கினால் திமுகவின் இரட்டை வேடம் என்ன என்பதை கண்டுபிடித்து விடலாம் என்கிறார்கள்.

அதாவது, ஆட்சியில் இல்லாதபோது அரசியல் செய்வதற்காகவே பிரதமர் வருகையை எதிர்க்கும் விதமாக அந்த கட்சி செயல்படுகிறது.

ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமரை நாங்கள் எந்தவிதமான அவமரியாதையும் செய்யவில்லை என்பதற்கு பிரதமருடன் நல்ல மென்மையான உறவு இருக்கிறது என காட்டிக் கொள்வதற்காக துடித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு என சொல்லப்படுகிறது.

ஏனென்றால் முன்பெல்லாம் பிரதமர் தமிழகம் வந்தால் உடனடியாக சமூக வலைதள பக்கங்களில் #gobackmodi என்ற ஹேஸ்டேக் தமிழக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் கூட ட்ரெண்டிங் ஆகும்.

ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. இதுவே தற்போதைய தமிழக அரசின் இரட்டை வேடத்தை காட்டுகிறது என சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வரவிருக்கிறார். விமான நிலையம் வந்து அங்கிருந்து சாலை மூலமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

தேசிய நெடுஞ்சாலைதுறையின் புதிய திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அவர் இன்று ஆரம்பித்து வைக்கிறார்.

இந்த சூழ்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கவிருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.

பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 22,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதோடு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதோடு சென்னையில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள், உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தடையை மீறி பறக்க விட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

ஆகவே பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.

அதனடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையால் நாளை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர்க்கும் விதத்தில் ஈ.வே.ரா. சாலை, சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு, அண்ணா சாலை, எஸ்.வி பட்டேல் சாலை ஜி.எஸ்.டி சாலைகளில் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் செல்வதை தவிர்க்க வேண்டும் என காவல் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழிகளை தவிர்த்து மாற்று வழிகளில் பயணம் செய்ய வாகன ஓட்டிகள் தயாராக இருக்க வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.