பிரதமர் பயணிக்கும் புதிய கார்! அதிரடி பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய காரின் விலை எத்தனை கோடி தெரியுமா?

0
68

முக்கிய பிரமுகர்கள் எப்படித்தான் பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் பயணம் செய்யும் வாகனத்தில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது, அந்த விதத்தில் பிரதமர் நரேந்திரமோடி பயணிப்பதற்காக புதிதாக வாங்கப்பட்டு இருக்கின்ற மெர்டிசிடிஸ் மே பேக் எஸ் 650 கார்டு காரை ஒரு நகரும் பாதுகாப்பு கோட்டை என்றே தெரிவிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அவர் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த சமயத்தில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், உயர்பாதுகாப்பு எடிஷன் குண்டுதுளைக்காத மகேந்திரா ஸ்கார்பியோ, உள்ளிட்ட கார்களை பயன்படுத்தியிருந்தார். பிரதமரான பிறகு ரேஞ்ச்ரோவர், வோக், டொயோட்டா, லேண்ட் க்ரூஸர், உள்ளிட்டவை மோடியின் அதிகாரபூர்வமான வாகனங்களாக இருந்தனர்.

இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் காரை மேம்படுத்துவதற்கு அவரைப் பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு படை முடிவெடுத்தது. அதனடிப்படையில் மெர்சிடிஸ் மே பேக் s650 கார்டு கார் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் விலை 12 கோடி என்று சொல்லப்படுகிறது. அண்மையில் இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அவர்களை வரவேற்க டெல்லி ஹைதராபாத் இல்லத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இந்த காரில் தான் சென்றார் என்று சொல்லப்படுகிறது. அப்போது இருந்து தலைவர்களுக்கும் அடுத்தபடியாக பலரின் கண்கள் இந்த புதிய காரை தான் நோட்டம் விட்டதாக சொல்லப்படுகிறது.

அதற்கு தகுதி இல்லாமல் இல்லை சொகுசில் உச்சம் பாதுகாப்பில் எதையும் விட்டுவைக்கவில்லை மிச்சம் என்பதே புதிய மெர்சிடிஸ் மேபேக் காரின் சிறப்பம்சம் என்று சொல்லப்படுகிறது.

இந்த காரை நோக்கி ஏகே 47 துப்பாக்கியால் தோட்டா மழை பொழிந்தாலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் கூட உள்ளே இருப்பவருக்கு சிறு பாதிப்பும் உண்டாகாது,இதன் பாலிகார்பனேட் ஜன்னல்கள் துப்பாக்கி குண்டுகள் ஊடுருவ அனுமதிக்காது என்று சொல்கிறார்கள். வெடிபொருள் எதிர்ப்புப் பொருளை கொண்டிருப்பதன் காரணமாக, வெறும் 2 மீட்டர் இடைவெளியில் 15 கிலோ குண்டு வெடித்தாலும் காரில் சிறு அசைவு கூட உண்டாகாது.

இந்த காரின் எரிபொருள் டேங்க் ஒரு சிறப்பு மூலப் பொருளால் வழங்கப்பட்டிருக்கிறது போயிங் நிறுவனம் தங்கள் தயாரிக்கும் தடைகளை தகர்க்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் எரிபொருள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இது என்று சொல்லப்படுகிறது.

இரட்டை டர்போ வி12 எஞ்சின் கொண்ட இந்த மெர்சிடிஸ் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிலோமீட்டர் ஆகும், இந்த காரின் டயர்கள் கூட விசேஷமானவை தான் என்று சொல்லப்படுகிறது. கார் தாக்கப்பட்டால் கூட தடங்கலின்றி சென்றுகொண்டே இருக்கும் இப்படி அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போகலாம். இப்போதைக்கு இந்த கார் தான் அதிகபட்ச பாதுகாப்பு வசதி கொண்ட விவிஐபி கார் என்று சொல்கிறார்கள்.

இந்த காரின் அச்சு அசலாக இன்னொரு காரும் வாங்கப்பட்டு இருக்கிறது அதோடு அதனுடைய விலையும் 12 கோடி என்று சொல்லப்படுகிறது. அது பிரதமர் மோடி பயணம் செய்யும் கார் போல போலியாக பயன்படுத்தப்படும் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. இந்த தகவலை பிரதமரின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

பொதுவாக முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் கார்களை பயன்படுத்தி வருகிறார்கள் ஆனாலும் அவற்றில் தாக்குதல்கள், துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்புகள், உள்ளிட்டவற்றை தாங்குகின்ற அளவு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்துகிறார்கள். குண்டு துளைக்காத கண்ணாடிகள், பல அடுக்கு கவச தகடுகள், என ஆனால் இவை பார்ப்பதற்கு சாதாரண கார்களாகவே தோற்றமளிக்கும் எந்த விதமான வித்தியாசமும் தெரியாது என சொல்லப்படுகிறது.