அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி!

0
88

நோய்த்தொற்று பரவல் கொஞ்சம், கொஞ்சமாக, குறைந்து வந்த சூழ்நிலையில், தற்போது அந்த நோய்த்தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது.

ஏற்கனவே கொரோனா தொற்று இருந்த சூழ்நிலையில், தற்சமயம் அது உருமாறி புதிய வகை முற்றாக உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்த புதிய வகை நோய் தொற்று முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு தற்சமயம் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஆகவே அதனை தடுப்பதற்காக பல்வேறு நாடுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த விதத்தில் இந்தியாவிலும் பல விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதோடு தடுப்பூசி செலுத்தும் பணியும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

அதோடு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த நோய் தொற்றினை முற்றிலுமாக தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் மத்திய, மாநில, அரசுகள் இறங்கியிருக்கின்றன.

அந்த இடத்தில் இந்தியாவில் நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் கீழே பாதிப்பு ஏற்பட்டு நோய்த்தொற்றின் இரண்டாவது அலை இறுதிகட்டத்தை அடைந்து வந்த சூழ்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தது. அதனையடுத்து நோய்த்தொற்று பரவல் மறுபடியும் காட்டுத்தீயாக பரவ தொடங்கியுள்ளது.

இதனால் நாள்தோறும் 1 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் பல்வேறு மாநிலங்கள் பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் நேற்றைய தினம் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் மறுபடியும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நோய் தொற்று பாதிப்பு நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி பணிகள் மற்றும் உட்கட்டமைப்புகளை தயார் செய்வது உள்ளிட்டவை தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ததாக சொல்லப்படுகிறது.