உலக தலைவர்கள் மத்தியில் சரிந்த பிரதமர் மோடியின் செல்வாக்கு!

0
60

மார்னிங் கன்சல்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு அமைப்பு ஆண்டுதோறும் ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அதாவது அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், இத்தாலி, பிரிட்டன், இந்தியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, கனடா, ஜப்பான், ஸ்பெயின், போன்ற நாடுகளின் தலைவர்கள் தொடர்பாக கருத்துக் கணிப்பு வெளியிட்டு வருகிறது.

அந்தந்த நாடுகளில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் தான் இந்த ஆண்டிற்கான புள்ளிவிவரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் சென்ற வருடம் 75 புள்ளிகள் பெற்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடம் வெறும் 66 புள்ளிகளை மட்டுமே பெற்று இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அதாவது பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு சரிந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் ஒப்புதல் மதிப்பீட்டு அடிப்படையில் தலைவர்களில் தொடர்ச்சியாக அவர் முதல் இடத்திலேயே நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நோய்த்தொற்றின் இரண்டாவது அலை ஆரம்பித்த பிற்பகுதியில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சரிந்து இருப்பதாகவும், அந்த நிறுவனம் சுட்டிக்காட்டி இருக்கின்றது. 65 புள்ளிகளுடன் இத்தாலிய பிரதமர் இரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 6-வது இடத்தில் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

என்னதான் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு உலக அளவில் சரிந்து விட்டது என்று சொன்னாலும் அமெரிக்க அதிபரை விடவும் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தான் இருக்கிறார் என்பதில் ஐயமில்லை. அப்படிப் பார்த்தோமானால் இந்தியாவிற்கு இது ஒரு கௌரவமான இடத்தை கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.