ஒமைக்ரான் மறுபடியும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை!

0
68

உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது, சென்ற மாதம் 24 ம் தேதி ஆரம்பித்த இந்த புதிய வகை நோய் தொற்று தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இருந்தாலும் டெல்டா வைரசை விட இது வேகம் குறைவானது என்று ஒரு சிலர் தெரிவித்து வருகிறார்கள் .

இந்த நோயினால் தென்ஆப்பிரிக்காவில் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அடுத்தபடியாக இங்கிலாந்தில் பலர் பாதித்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோல உலகின் பல நாடுகளில் இந்த புதிய வகை நோய் தொடங்கி இருக்கிறது.

இந்த புதிய வகை நோய் தொற்று கடந்த மாதம் 24 ஆம் தேதி தான் தென்ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அடுத்து இந்தியாவில் தொடங்கி உலக நாடுகள் பலவும் தென் ஆப்பிரிக்காவிற்கு பயண கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றன. இருந்தாலும் ஒரு மாத காலத்தில் இந்த நோய்த்தொற்று பரவல் சுமார் 106 நாடுகளில் பரவி இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி நுழைந்த இந்த புதிய வகை நோய் தொற்று 20 நாட்களில் 227 பேருக்கு பரவியிருக்கிறது, டெல்டா வைரசை விட வேகம் குறைந்தது. அதேநேரம் மூன்று மடங்கு வேகமாக பரவக்கூடியது என்ற காரணத்தால், இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கும் , யூனியன் பிரதேச அரசுகளுக்கும் , மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், தேசிய அளவில் இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பை தடுப்பதற்காக வழிமுறைகள் தொடர்பான விவாதத்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று சுகாதார நிபுணர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர், நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் சுகாதார நிபுணர்கள், உள்ளிட்டோர் பங்கேற்று கொள்ள இருக்கிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு இந்த புதிய வகை நோயை கட்டுப்படுத்துவதற்கு இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.