பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி அறிமுகப்படுத்தும் புதிய வளர்ச்சி திட்டங்கள்! பல ஆயிரம் கோடி கணக்கில் மதிப்பு!

0
115
Prime Minister Modi lays the foundation stone for new development projects! Worth several thousand crores!
Prime Minister Modi lays the foundation stone for new development projects! Worth several thousand crores!

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி அறிமுகப்படுத்தும் புதிய வளர்ச்சி திட்டங்கள்! பல ஆயிரம் கோடி கணக்கில் மதிப்பு!

பிரதமர் அலுவலகம் இன்று ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பிரதமர் இன்று உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை புரிந்தார் என்றும், அதன்பின் நகரில் 18 ஆயிரம் கோடி மதிப்பிலான தேசிய வளர்ச்சி திட்டங்களை தொடங்கி அதை நாட்டுக்கு அர்ப்பணித்தார் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அங்கு விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பிரதமர் இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் 11 வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுகிறார் என்றும், 8300 கோடி மதிப்பில் டெல்லி டு டேராடூன், பொருளாதார வழித்தடம் உள்ளிட்டவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இருந்து டேராடூன் செல்வதற்கான பயண நேரம் 6 மணி நேரத்தில் இருந்து இரண்டரை மணி நேரமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனவிலங்குகள் நடமாட்டம் இல்லாத வகையிலும் இந்த சாலை அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்காக சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் ஒன்றையும் தனியாக அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வனவிலங்குகள் சாலையின் குறுக்கே சென்று விபத்துக்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கும் வகையில் இந்த மேம்பாலம் கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பத்ரிநாத் மற்றும் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படும்போது மக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளையும் பிரதமர் இன்று திறந்து வைக்கிறார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் டேராடூனில் குழந்தைகள் பாதுகாப்பு நல திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

இதன் மூலம் குழந்தைகள் சாலைகளில் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 500 கோடி மதிப்பில் ஹரித்வாரில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்காகவும் அடிக்கல் நாட்டுகிறார் என்றும், ஸ்மார்ட் ஆன்மீக நகரம் திட்டத்தின்படி பத்ரிநாத்தில் மேம்பாட்டு திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டி வருகிறார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 120 மெகாவாட் திறனுள்ள நீர்மின் நிலைய திட்டம் மற்றும் டேராடூனில் இமயமலை கலாச்சார மையத்தையும் பிரதமர் இன்று திறந்து வைக்கிறார். டேராடூனில் நவீன நறுமண பொருட்கள் மற்றும் நறுமண ஆய்வகத்தையும்  திறந்து வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிரதமர் உத்தரகாண்டில் மட்டும் 18 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

அவற்றில் 8300 கோடி மதிப்பு டெல்லி – டேராடூன் பொருளாதார வழித்தடத்தை சாலை அமையப் பெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழித்தடத்தில் ஹரித்வார், முசாபர்நகர், ஷாம்லி, யமுனா நகர், பாக்பத், மீரட் மற்றும் பராவத் ஆகிய ஏழு பகுதிகளை இணைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.