அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசும் வெளியிட்ட அதிரடி அறிக்கை!

0
97
Price increase! Action report released by the state government following the central government!
Price increase! Action report released by the state government following the central government!

அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசும் வெளியிட்ட அதிரடி அறிக்கை!

விலைவாசி உயர்வின் போது மக்களின் வாங்கும் சக்தி குறையும் போது விறபனைக் குறைவும் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு விலைவாசி உயர்வை ஈடுகட்ட மக்களுக்கு அளிக்கப்படுவதே அகவிலைப்படி. இந்த அகவிலைப்படியை கூட மாநில அரசுகள் அதற்குரிய தேதியில் வழங்காமல் பின் தேதியிட்டு வழங்குவது மக்களுக்கு வருத்தமளிக்கும் செயலாகும்.

மத்திய அரசாங்கம் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியை உயர்த்தியதும் மாநில அரசுகளும் அகவிலைப் படி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.அந்த வகையில் திரிபுரா மாநில அரசும் அந்த மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு மகிழ்ச்சியளித்துள்ளது.

அம்மாநில முதல்வர் மாணிக் சாஹா அறிவித்த அறிவிப்பின்படி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியானது 12% உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப் படியானது டிசம்பர்-1 ஆம் தேதி முதலே அமலுக்கு வரும் எனவும் அறிவித்தார்.

இதனால் அந்த மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 8% சதவீதத்தில் இருந்து 20% சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 1,04,600  –       80,800 என அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வினால் 1.85 இலட்சம்அரசு ஊழியர்கள் பயன் பெறுவதோடு 1440.80  கோடி வரை  அரசுக்கு கூடுதலாக நிதிசுமை அதிகரிக்கும். அடுத்த வருடம் மார்ச் அந்த மாநிலத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில் அந்த அரசு அகவிலைப்படியை உயர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.