நாக்கில் எச்சில் ஊரும் சுவையான வஞ்ரம் மீன் பிரியாணி எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்!

0
84

 

பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. மீனை வைத்து பிரியாணி என்றால் யாரும் விரும்பாதவர்களே இருக்க முடியாது.

இங்கு நாம் வஞ்ரம் மீனை வைத்து பிரஷர் குக்கரில் எப்படி பிரியாணி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

மீன் பிரியாணி

தேவையான பொருட்கள்

மீனை ஊற வைக்க

1. வஞ்சர மீன் -ஒரு கிலோ.

2. மஞ்சள் தூள் -ஒரு தேக்கரண்டி

3. மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி

4. உப்பு -ஒரு தேக்கரண்டி

 

பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

1.ஊற வைத்த மீன் துண்டுகள்

2. நெய் 2 மேசைக்கரண்டி

3. எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி

4. பிரியாணி இலை 3

5. பட்டை 3

6. கிராம்பு 5

7. ஏலக்காய் 4

8. வெங்காயம் 5 பொடியாக நறுக்கியது

9. இஞ்சி 1 பெரிய துண்டு நறுக்கியது

10. பூண்டு 8 பல்

11. பச்சைமிளகாய் 3

12. காய்ந்த மிளகாய் 3

13. துருவிய தேங்காய் 2 மேசைகரண்டி

14. தக்காளி 3 பொடியாக நறுக்கியது

15. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, கொத்தமல்லி தூள் 2 தேக்கரண்டி.

16. கொத்தமல்லி இலை புதினா இலை ஒரு சிறிய கட்டு.

17. பாஸ்மதி அரிசி ஒரு கப்

18. தேங்காய்ப்பால் 100 மில்லி நீர் சேர்த்தது.

செய்முறை:

1.நறுக்கிய மீன் துண்டுகளை நன்றாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

2. பிரஷர் குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் இரண்டையும் ஊற்றவும்.

3. பின் அதில் ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

4. மிக்ஸியில் இஞ்சி, பூண்டு ,காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் ,தேங்காய் ஆகியவற்றை சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

5. வெங்காயம் வதங்கிய பின் அரைத்து வைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.

6. மசாலாவில் பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதன் பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

7. மசாலாவில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் ,கொத்தமல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

8. அடுத்து அதில் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை நறுக்கி அதில் போட்டு வதக்கவும்.

9. தக்காளி நன்கு வதங்கியவுடன் மீன் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.

10. மீன் உடையாமல் கிளறவும்.

11. பின் நன்கு கழுவிய பாசுமதி அரிசியை குக்கரில் போட்டு கிளறி விடவும்.

12. இறுதியாக எடுத்து வைத்த தேங்காய் பாலை ஊற்றி கிண்டி விடவும்.

13. குக்கரை ஆவி வந்ததும் மூடி சரியாக 5 நிமிடம் வேக வைக்கவும்.

14. அடுப்பை நிறுத்தி பிரஷர் குக்கர் விசில் அடங்கும் வரை காத்திருந்து அதன் பின் குக்கரை திறந்து பாருங்கள்! மீன் பிரியாணி ரெடி!

இந்த ஊரடங்கு காலத்தில் உங்கள் வீட்டில் சுவையான மீன் பிரியாணி செய்து அசத்துங்கள்!

author avatar
Kowsalya