அதிபர் பதவிக்கான தேர்தல் – அமெரிக்காவில் இன்று வாக்கு பதிவு!

0
72

46வது அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. அதில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் ஆகியோருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்திய நேரத்தின் படி, இன்று பிற்பகல் 03:30 மணி அளவில் தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெறும் அமெரிக்க அதிபர் வருகின்ற  ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி அன்று, அதிபர் பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இருக்கும் முன்னணி பத்திரிக்கைகள் நடத்தியிருந்த கருத்துக் கணிப்பின்படி ஜோ பைடன் என்பவருக்கு அதிக அளவில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஜோ பைடனின் வெற்றியை தீர்மானிக்கும் சில முக்கிய மாநிலங்களான அரிசோனா, விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் புளோரிடா உள்ளிட்ட இடங்களில் இவருக்கு ஆதரவு அதிகமாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்றுதான் என்றாலும், ஏற்கனவே பல இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டு வருகிறது. இவ்வாறு பல நாட்கள் வாக்குப்பதிவு நடைபெறுவதால்  முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார் டிரம்ப். அதுமட்டுமின்றி இந்த நீண்ட நாள் வாக்குப்பதிவு குறித்து சட்டப்படி ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

author avatar
Parthipan K