வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி நீதிமன்றத்தில் மனு – முறைகேடு நடந்ததாக அதிபர் டிரம்ப் புகார் அளிக்கிறார்!

0
73

கடந்த மாதம் மூன்றாம் தேதி அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. தற்போது தேர்தல் முடிந்து அதற்கான முடிவுகள் நேற்றிலிருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. 

அதிபர் பதவிக்கான தேர்தல் முடிவுகளில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் என்பவர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதேசமயம் குடியரசுக் கட்சியை சார்ந்த டொனால்ட் ட்ரம்ப் சில வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து பின்னடைவில் இருந்து வருகிறார்.

இவர்களில் யார் அறுதிப் பெரும்பான்மை இடங்களான மொத்தம் 270 இடங்களை  கைப்பற்றுகிறார்களோ அவர்களே அடுத்த அமெரிக்க அதிபர் நாற்காலியை அடைவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜோ பைடன் என்பவர்  264 இடங்களை பிடித்துள்ளார். குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் என்பவர் 213 இடங்களை பிடித்துள்ளார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டு வருகிறது.

தற்போது பென்சில்வேனியா, மிக்சிகன், ஜார்ஜியா ஆகிய மூன்று இடங்களிலும் வாக்குப்பதிவை நிறுத்துமாறு அதிபர் டிரம்ப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த மூன்று மாகாணங்களிலும் முறைகேடு நடந்துள்ளதாக அதிபர் டிரம்ப் தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜோ பைடன் இன்னும் 6 இடங்களை கைப்பற்றி விட்டால் அவரை அடுத்து அமெரிக்க அதிபராக வாய்ப்பு உண்டு. ஆனால் தற்போது அதிபர் டிரம்ப் மனுதாக்கல் செய்வதால் அடுத்து அமெரிக்க அதிபர் யார் என்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒன்பது மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K