கேக் வகைகள் தயாரிப்பு! ஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்! 

0
118
preparation-of-types-of-cakes-new-information-released-by-the-company
preparation-of-types-of-cakes-new-information-released-by-the-company

கேக் வகைகள் தயாரிப்பு! ஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்!

தற்போது ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு கோரிக்கை எழுந்து வந்தது.அதனை தமிழக அரசு நிறைவேற்றி கொடுத்தது.பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி உத்தரவிட்டது.மேலும் ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ 60 உயர்த்தினர்.

மேலும் ஆயுத பூஜை ,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் வகைகள் மற்றும் மிக்ஸர்,பட்டர் முறுக்கு ஆகியவற்றை ஆவின் நிறுவனம் தயாரித்தது விற்பனை செய்தனர்.அப்போது ரூ 166 கோடி வருவாய் கிடைத்தது.

அடுத்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரூ200 கோடி வருவாய் ஈட்ட ஆவின் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.அதனை தொடர்ந்து வரும் கிறிஸ்துமஸ் ,ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு கேக் வகைகளை தயாரித்து விற்பனை செய்வது குறித்து ஆவின் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகின்றது.

மேலும் தற்போது கப் கேக் மட்டுமின்றி ,அரை கிலோ ,ஒரு கிலோ அளவில் கேக் தயாரிப்பது மற்றும் பல்வேறு சுவைகளில் கேக் தயாரிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகின்றனர்.

இது குறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் கூறுகையில் கிறிஸ்துமஸ் ,ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு,ஆவின் கேக் வகைகள் தாயரிப்பு மற்றும் விற்பனை குறித்து நுகர்வோர் தரப்பில் இருந்து கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் கேக் தயாரித்து ,விற்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்படும்.இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.