விஜய்க்காக காத்திருக்கும் பிரேமம் படத்தின் இயக்குனர்!

0
70

விஜய்க்காக காத்திருக்கும் பிரேமம் படத்தின் இயக்குனர்!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. இதையடுத்து விஜய் தனது அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார்.

இந்த படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில், பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க காத்திருக்கிறேன் என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிரேமம். இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி, நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார். மலையாளத்தில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

சமீபத்தில், சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா? என இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், பிரேமம் படம் வெளியானதும் தமிழ்நாட்டில் இருந்து எனக்கு வந்த முதல் போன் கால் விஜய்யிடம் இருந்துதான் வந்தது. அப்போது விஜய்யின் மேனேஜர் என்னை கூப்பிட்டு பேசினார். விஜய்யை தனிப்பட்ட முறையிலும் நான் சந்தித்தேன்.

ஒருநாள் கண்டிப்பாக விஜய் என்னை கூப்பிடுவார். அதற்காக நான் காத்திருக்கிறேன். அப்படி அவர் என்னை கூப்பிடும்போது நான் அவரை வைத்து இயக்கும் படம் உறுதியாகும் இவ்வாறு தெரிவித்தார்.

author avatar
Parthipan K