முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த்! வேட்புமனு தாக்கல்!

0
120

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த விதத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு மண்டல தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ,மனிதநேய மக்கள் கட்சி, போன்ற கட்சிகள் இடம் பிடித்திருக்கின்றன. அதேபோல திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டது.

அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக, தமாக போன்ற கட்சிகள் இடம் பிடித்திருக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்ற பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட இருக்கின்றது. அதை தவிர மற்ற கட்சிகளுடன் தற்சமயம் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில், தேமுதிக சார்பாக எதிர் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல்முறையாக பிரேமலதா விஜயகாந்த் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் போன்ற மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று தகவல் கிடைத்திருக்கிறது.