இனி மருத்துவமனைக்கு செல்லாமலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்:! மக்களுக்காக உருவாக்கப்பட்ட இ-சஞ்சீவினி ஓபிடி திட்டம்! பதிவு செய்து கொள்ளுங்கள்

0
69

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.இது மட்டுமின்றி கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக,நாள்பட்ட நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தவர்கள்,கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல்,சளிக்கு கூட மக்கள் மருத்துவமனையை நாட அஞ்சுகின்றனர்.
இதற்கு வழி காணும் வகையில் மத்திய அரசு
‘இ-சஞ்சீவினி ஓபிடி’ என்ற திட்டத்தை துவக்கி வைத்தது.

‘இ-சஞ்சீவினி ஓபிடி’ திட்டம் தமிழகத்தில் சிறந்து விளங்குவதாக சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர்.மேலும் தமிழ்நாட்டில் இதில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பதிவு
செய்துள்ளதாகவும் ,தமிழகத்தில் மட்டுமே 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆலோசனை கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.மற்ற மாநிலங்களின் பொருத்தவரை தமிழகத்தில் இத்திட்டம் சிறந்து விளங்குவதாக சுகாதாரத்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனை பொது மக்கள் பயன்படுத்த https://esanjeevaniopd.in/ என்ற இணையதளத்தில் மொபைல் நம்பரை பதிவு செய்து ஒன் டைம் பாஸ்வேர்டு கொடுத்து மருத்துவர்களின் ஆலோசனைக்காக டோக்கன் முறையில் காத்திருக்க வேண்டும்.

மருத்துவர் வந்தபின்பு கால் நவ் (Call Now ) வந்த பின்பு மருத்துவர்களை காணொளி மூலமாக ஆலோசனை கேட்கலாம். மருத்துவரின் ஆலோசனை முடிந்தபின் மருந்துச் சீட்டைமருத்துவரின் கையெழுத்துடன் பதிவிறக்கம் செய்து மருந்து கடைகளில் கொடுத்து மருந்தை பெற இயலும்.

மற்ற மாநிலங்களைப் பொருத்தவரை தமிழகத்தில் சிறந்து விளங்குவதால்,
தமிழகத்தில் மட்டும் ஏழு நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த சேவை வழங்கப்படுகிறது. எச்ஐவி /எய்ட்ஸ் நோயாளிகளுக்கு எனபிரத்யேகமாக மருத்துவர்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் மதியம்1 மணி வரை மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்குகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் காணொளி மூலமாகவே மருத்துவர்களைக் கண்டு ஆலோசனை பெறுவதால் கர்ப்பிணி பெண்கள் ,குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதுகாக்க படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

author avatar
Parthipan K