யார் இந்த நேசமணி? எதற்காக இந்த ப்ரே பார் நேசமணி ட்ரெண்டிங் #Pray_for_Neasamani #Neasamani

யார் இந்த நேசமணி? எதற்காக இந்த ப்ரே பார் நேசமணி ட்ரெண்டிங் #Pray_for_Neasamani #Neasamani

முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் திடீரென ப்ரே பார் நேசமணி நகைச்சுவையான ஹேஷ் டேக் ஒன்று ட்ரெண்டிங் ஆகி பரவி வருகிறது. யார் இந்த நேசமணி? எதற்காக இதை செய்கிறார்கள்? எப்படி இது ஆரம்பிக்கப்பட்டது? என்பது குறித்து சமூக வலைதளங்களில் தேடியபோது கிடைத்த தகவல்.

வெளிநாட்டை சேர்ந்த கட்டட பொறியாளர் குழுவில் உள்ள ஒரு நபர் சுத்தியல் படத்தை வைத்து, அதற்கான தமிழ்ப் பெயரைக் கேட்திருக்கிறார். இதனையடுத்து அதற்கு சுத்தியல் என்று குறிப்பிட்ட அந்தப் பொறியாளர், அதன் கூடவே நடிகர் விஜய் மற்றும் சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ் படத்தில் வடிவேலு தலையின் மீது சுத்தியல் விழுகின்ற காட்சியையும் இணைத்து பதிவிட்டுள்ளார், மேலும் கூடவே அவரது பெயர் பெயிண்டர் நேசமணி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Cricket-world-cup-2019-opening-ceremony-to-begin-at-London-today-News4-Tamil-Online-Tamil-News-Sports-News-Cricket-News-Live-Updates-Today2
Cricket-world-cup-2019-opening-ceremony-to-begin-at-London-today-News4-Tamil-Online-Tamil-News-Sports-News-Cricket-News-Live-Updates-Today2

இதைபார்த்த அந்த வெளிநாட்டு பொறியியலாளரோ, இந்த சம்பவம் நடந்தது ஒரு தமிழ் திரைப்படத்தில் என்பதை அறியாமல் நேசமணியைக் காப்பாற்றுங்கள் என்பதைக் குறிக்கும் வகையில் ப்ரே பார் நேசமணி ( pray for nesamani ) என்று தனது நண்பருக்கு அக்கறையுடன் பதில் தகவல் அனுப்பியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக சேவ் காண்ட்ராக்டர் நேசமணி ( Save Contractor Nesamani ) என்ற ஹேஷ் டேக் உருவாக்கப்பட்டு ட்விட்டர் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதை தொலைக்காட்சி சேனல்களில் வெளியாகும் முக்கியச் செய்திகளைப் போல உருவாக்கி வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள். இதில் ட்விட்டரில் பதிவிட்ட சிலவற்றை பார்க்கலாம்

இவ்வாறு பொழுதுபோக்காக சிலர் தொடங்கிய இந்த நகைச்சுவையான டிரெண்டிங் பிரபலமாகி தற்போது உள்ளுர் அரசியல் தலைவர்களை மட்டுமில்லாமல் உலகத் தலைவர்களையும் கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். இவ்வாறு வெளியாகும் மீம்ஸ் பதிவுகள் #Nesamani மற்றும் #Pray_for_Neasamani என்ற ஹேஷ் டேக்குடன் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ப்ரே பார் நேசமணி- #Pray_for_Neasamani என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்காக நீடித்து வருகிறது.

Pray_for_Neasamani Hashtag Trending

Copy
WhatsApp chat