பிரசன்னாவை தொடர்ந்து சிக்கிய சிம்லா முத்துசோழன் அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள்

பிரசன்னாவை தொடர்ந்து சிக்கிய சிம்லா முத்துசோழன் அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள்

மக்களவை தேர்தல் ஆரம்பித்தது முதல் திமுக தலைவர்கள் தொடர்ச்சியாக எதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்கது சமீபத்தில் திமுக பேச்சாளரான தமிழன் பிரசன்னா குறித்த தவறான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியிலும் கட்சியினரிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இணையத்தில் வெளியான இந்த வீடியோ பற்றி கருத்து கூறிய பிரசன்னா அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லையென்றும் அது தனக்கு பிடிக்காதவர்கள் சிலர் வேண்டுமென்றே பரப்பிய பொய் செய்தி என்றும் கூறி மறுத்திருந்தார்.இவர் மறுப்பு தெரிவித்திருந்தாலும் திமுகவை விமர்சனம் செய்வதற்கு எதிர்கட்சியினர் இந்த விவகாரத்தை சரியாக பயன்படுத்தி கொண்டனர்.

இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு மாநிலங்களில் செயல்படுத்த நினைக்கும் புதிய மும்மொழி கொள்கையில் தமிழகத்தில் கட்டாயமாக இந்தியை படிக்க வேண்டும் என்று திணிப்பதாக குற்றம் சாட்டி வந்தார். இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் இந்தியை திணிக்க நினைத்தால் திமுக கடுமையான போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் இந்திக்கு எதிரான பிரச்சாரத்தை முன் மொழிந்த நேரத்தில் தற்போது இந்த விவகாரம் அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது.இதில் குறிப்பாக ஸ்டாலின் மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் பள்ளிகளில் மட்டும் ஹிந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது என்று சமூக வலைத்தளங்களில் ஸ்டாலினையும் திமுகவினரையும் பொதுமக்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இதுமட்டுமில்லாமல் திமுகவினர் 45க்கும் மேற்பட்ட  இந்தி கற்றுக் கொடுக்கும் பள்ளிகளை நடத்தி வருவதாக பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் ஆதாரத்துடன் விமர்சனம் செய்துள்ளனர்.

இவ்வாறு ஸ்டாலின் ஆரம்பித்தது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளதால் அவரது கட்சியின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் நபர்கள் விவாதத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து R. K நகரில் போட்டியிட்ட சிம்லா முத்துசோழனும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்தில் தன்னுடைய மகன் பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்று மகனின் கல்வி சான்றிதழுடன் பதிவிட்டிருந்தார். இதில் அவரது மகன் இந்தியும் படித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது.

Prasanna and simla muthuchozhan issues in dmk-news4 tamil online tamil news today

இந்தியை தொடர்ந்து எதிர்த்து வரும் திமுகவின் முக்கிய நிர்வாகியான இவரது மகன் இந்தி படித்துள்ள தகவலை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர். அதில் திமுகவினர் குழந்தைகள் இந்தி கற்கலாம், ஏழை எளிய மக்கள் இந்தியை படிக்கக்கூடாதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்த பதிவினை நீக்க சொல்லி திமுக தலைமை சார்பாக சிம்லா முத்துசோழனுக்கு அறிவுறுத்தியுள்ளதால் அவர் பெரும் சிக்கலில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

தற்போது நடந்து வரும் இந்த நிகழ்வுகளால் தொடர்ந்து இந்தியை எதிர்த்து அரசியல் செய்து வந்த திமுகவின் இரட்டை நிலைப்பாடு அவர்களின் அரசியல் சூழ்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று பொதுமக்களே விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

திமுக தலைவரான ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் இந்தி படிக்கலாம், மேலும் பணத்திற்காக இவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தியை சொல்லி கொடுக்கலாம்.ஆனால் எழை, நடுத்தர மக்கள் இந்தியை படிக்க கூடாதா? என தற்போது அனைவரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். இதனை சமாளிக்க முடியாமல் திமுகவினர் திணறி வருகின்றனர்.

கடந்த காலங்களை போல இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி திமுக ஆட்சியை பிடித்தது போல் தற்போதும் இந்தி எதிர்ப்பு பிரசாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று ஸ்டாலின் எதிர்பார்த்த நிலையில் தற்போது அது அவருக்கு பெரும் ஏமாற்றமாக முடிந்துள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க எங்களது News4 Tamil முகநூல் பக்கத்தையும் ட்விட்டர் பக்கத்தையும் பின்தொடருங்கள்.

Copy
WhatsApp chat