மன அழுத்தம் நீங்க பிராணமய கோசம்!

0
81

நேராக நிமிர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும், முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும், கண்களை மூடி இருகைகளையும் சின் முத்திரை வைத்து மிக மெதுவாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். மிக மெதுவாக மூச்சை வெளியே விட வேண்டும், அதே போல பத்து முறைகள் காலை மற்றும் மாலை பயிற்சி செய்ய வேண்டும்.

1மணி நேரத்திற்கு ஒரு முறை 2 நாசிகள் வழியாக மூச்சை இழுத்து மிகவும் மெதுவாக மூச்சை விட வேண்டும், 5 முறைகள் இதேபோல செய்ய வேண்டும்.

மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் நிமிர்ந்து அமர்ந்து இரு நாசி மூலமாக மெதுவாக மூச்சை இழுத்து 5 வினாடிகள் மட்டுமே மூச்சடக்கி அதன் பிறகு மெதுவாக மூச்சை இரு நாசிகளின் மூலமாக வெளியிட வேண்டும், 10 முறை இதுபோல செய்ய வேண்டும்.

இதனால் பிராணமய வெகு சிறப்பாக இயங்கும், நுரையீரல் இயக்கம் நன்றாக இருக்கும், நுரையீரல் நல்ல காற்றை உள்வாங்கி அசுத்த காற்றை வெளியேற்றும் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகும், மனஅழுத்தம் குறையும் மன அமைதி கிடைக்கும்.