ஜப்பானில் உருவான சக்தி வாய்ந்த புயல்

0
63
ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள தீவுகளை, கடந்த வாரம் ‘மேசக்‘ என்ற சக்தி வாய்ந்த புயல் கடுமையாக தாக்கியது. இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து ஜப்பான் இன்னும் மீண்டு வராத நிலையில் அங்கு ஹைசென் என்கிற சக்தி வாய்ந்த புயல் உருவானது. இந்த புயல் ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளை தாக்கியது. இதன் காரணமாக  சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்தப் புயல் கரையை ஜப்பான் கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், அப்போது மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் புயலின் போது ஒகினாவா, ககோஷிமா, நாகசாகி மற்றும் குமாமோடோ ஆகிய மாகாணங்களின் மிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் மிகவும் சீற்றமாக காணப்படும் என்றும், தாழ்வான பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
author avatar
Parthipan K