தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு! வெளி மாநிலங்களுக்கு கரண்ட் சப்ளை! சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சரின் பகிரங்க பேச்சு!  

0
68
Electricity bill

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு! வெளி மாநிலங்களுக்கு கரண்ட் சப்ளை! சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சரின் பகிரங்க பேச்சு!

திமுக பத்து வருடங்களாக ஆட்சி அமர முடியாமல் தற்போது தான் ஆட்சி செய்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த அணை மின் தடை ஏற்படும் என்பது தெரிந்த ஒன்றே. அந்த சொல்லு கிணங்க திமுக வந்ததும் மின்தடை குறித்து புகார்கள் அடுத்தடுத்து வர தொடங்கிவிட்டது. ஸ்டாலின் தான் வராரு விடியும் தரப்போகிறார் என்ற டயலாக் எல்லாம் போய் விடியலே இல்லாத தமிழகம் ஆக மாறிவிட்டது. தற்பொழுது சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பல சலுகைகள் மக்களுக்கு அளித்து வருகின்றனர். மக்களிடம் பெரும்பான்மையாக தற்போது பேசப்பட்டு வருவது மின் தடை ஏற்படுவது தான்.

அது குறித்து சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஓர் விளக்கம் அளித்தார். தற்பொழுது தமிழகத்தில் எந்த இடத்திலும் மின்தடை புகார்கள் வருவதில்லை. வரும் வந்தாலும் அவர்கள் தேவையை பூர்த்தி செய்து பராமரிப்பு பணி செய்யப்பட்டு வருகிறது. மே மாதம் 1ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை 5 லட்சத்து 94 ஆயிரம் யூனிட் மின்சாரத்தை ரூ 12க்கு கொள்முதல் செய்யப்பட்ட மின்தடை அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின் தட்டுப்பாடு அதிகமாக காணப்பட்டது.

அவ்வாறு காணப்பட்ட 16 மெகாவாட் மின்சாரத்தையும் எந்தவித பிரச்சனையுமின்றி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. வரும் காலங்களில் புறம்போக்கு நிலங்களில் இல்லாதவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல எம்எல்ஏக்களுக்கு கூடுதல் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று கூறிவந்தனர். அவ்வாறான திட்டம் ஏதும் தற்சமயத்தில் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.