நண்பர்கள் தினத்தை முன்னிட்டு வெளியான பிரண்ட்ஷிப் படத்தின் போஸ்டர்!! வேற லெவல் லுக்கில் அர்ஜுன் மற்றும் லாஸ்லியா!!

0
58
Poster of Friendship movie released on the eve of Friends Day !! Arjun and Laslia on another level look !!
Poster of Friendship movie released on the eve of Friends Day !! Arjun and Laslia on another level look !!

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு வெளியான பிரண்ட்ஷிப் படத்தின் போஸ்டர்!! வேற லெவல் லுக்கில் அர்ஜுன் மற்றும் லாஸ்லியா!!

லாஸ்லியா மரியநேசன் இவர் இலங்கை நாட்டைச் சேர்ந்த தமிழ் செய்திவாசிப்பாளர் ஆவார். மேலும் இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் இலங்கையில் கிளிநொச்சியில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாயும் தந்தையும் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். பின்னர் அவர் திருகோணமலைக்கு இடம்பெயர்ந்தனர். தன் கல்வியை திருகோணமலையில் தொடர்ந்தார். இவர் நான்கு ஆண்டுகளாக கொழும்புவில் வசித்து வருகிறார்.

2011 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2019ஆம் ஆண்டு வரை சக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பல திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் இவர் தற்போது சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் ஹர்பஜன்சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரைப்படத்துறையில் அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டும் இப்படத்தில் போஸ்டர் ஒன்றினை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் லாஸ்லியா அர்ஜூன், ஹர்பஜன் சிங், சதீஷ் KPY பாலா உள்ளிட்ட அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளனர். அந்த புகைப்படம் இச்செய்தியின் இடையில் இணைக்கப்பட்டுள்ளது.

author avatar
CineDesk