10.5% உள் இட ஒதுக்கீடு விவகாரம்! எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை திருமங்கலத்தில் போஸ்டர்!

0
83

கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை நடத்தியது.

அதோடு தமிழ்நாடு முழுவதும் அந்தப் போராட்டம் பெரிதாவதை கவனத்தில் கொண்ட அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று தீர்மானித்தார்.

ஆகவே இந்த பிரச்சனை பெரிதாகி ஏதாவது அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பாக என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் வன்னியர்கள் கேட்டபடி 10 . 5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை வழங்கி அவசர சட்டம் பிறப்பித்தார்.

அதோடு விரைவில் இந்த சட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறப்பட்டு சட்டம் முழு வடிவம் பெறும் என்று தெரிவித்ததோடு அதை செய்தும் காட்டினார்.

ஆனால் தற்போதைய ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக அந்த இட ஒதுக்கீட்டிற்கு அப்போது வரவேற்பு தெரிவிப்பதை போல தெரிவித்து விட்டு பின்னாளில் மறைமுகமாக அந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்பட்டது என சொல்லப்படுகிறது.

இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கம் செய்யப்பட்டனர். இறுதியாக அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதும் தற்போதைய திமுகவின் ஆட்சிக் காலத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பிறகு தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் முதல்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

இந்த நிலையில் அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மறவர் கூட்டமைப்பு மதுரை திருமங்கலம், விருதுநகர் போன்ற பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த சுவரொட்டியில் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் மறவர், வலையர், வட்டர் தொட்டிய நாயக்கர் உள்ளிட்டோர் அடங்கிய 68 சீர் மரபு பழங்குடியினர் போன்ற 115 சாதியினரை வஞ்சகம் செய்து ஒரே சாதிக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி அவர்களே எங்கள் பகுதிக்கு வராதீர்! வராதீர்! வராதீர்! என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளனர்.

இதிலிருந்து வன்னியர் சமூக மக்கள் எந்த விதத்திலும் முன்னேறக்கூடாது என்று சில அரசியல் கட்சிகள் தங்களுடைய சொந்த அரசியல் லாபத்திற்காக முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்றால், மற்ற பட்டியலின வகுப்பை சார்ந்த ஒரு சில பிரிவினரும் வன்னியரின் வளர்ச்சியில் விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.

ஆனால் இந்த வன்னியர் இனமானது ஒற்றுமையுடன் செயல்பட்டால் மற்ற பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர்கள் நிச்சயமாக இந்த வன்னியர் இனத்தை சீண்டிப் பார்க்க விரும்ப மாட்டார்கள்.

ஆனால் இவர்களிடம் ஒற்றுமை இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதனால்தான் எப்போதும் வன்னியர்களை சீண்டுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இனிவரும் காலங்களிலாவது இந்த வன்னியர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்களா என்று பார்க்கலாம்.