அதிமுக தலைமை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை! அதிரடியாய் ஆய்வில் இறங்கிய அமைச்சர்!

0
55

சென்னை போரூர் குளத்தில் மருத்துவ கழிவுகளை கொள்கிறார்கள் என்று தெரிந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் போரூர் குளத்தில் தற்சமயம் அவர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

சொல்லப்போனால் சென்னை மக்களுக்கான குடிநீர் ஆதாரங்களில் மிக முக்கியமாக இருக்கும் போரூர் குளத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. இது குறித்து அறிக்கையை வெளியிட்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நீர் மாசுபடுதல் தடுக்கும் விதத்தில் சுகாதாரக்கேடு உண்டாவதை முற்றிலுமாக தடுக்கும் வகையிலும், குளங்களில் குப்பைகளை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். மருத்துவ கழிவுகளை தனித்தனியாக பிரித்து கையாள மருத்துவமனைகளுக்கு உரிய அறிவுரைகள் கொடுக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சரை தான் கேட்டுக்கொள்வதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார்.

தற்சமயம் போரூர் குளத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் இருக்கின்ற தியாகிகள் மணிமண்டபத்தில் ஆர்யா என்கிற பாஷ்யம், சங்கரலிங்கனார், செண்பகராமன், உள்ளிட்டோரின் உருவ படங்களுக்கு அமைச்சர் சுப்பிரமணியம் மலர்தூவி மரியாதை செலுத்தி இருக்கின்றார். அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் அதிமுக ஆட்சியில் போரூர் குளத்தில் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலமாக மண்ணை கொட்டி மூடுவதற்கான முயற்சிகள் மேற் கொண்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இப்படி அந்த குளத்தை சமம் செய்வதற்கு முயற்சி செய்த சமயத்தில் முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தால் தான் தற்சமயம் அந்த குளம் அழியாமல் இருக்கிறது. அப்போது பன்னீர்செல்வம் தான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் தற்சமயம் அந்த குளத்தின் மீது அவருக்கு அக்கறை வந்திருக்கிறது. அந்த குளத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தடுத்து நிறுத்தப்படும் மருத்துவ கழிவுகளை ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

தற்சமயம் போரூர் ஏரி இருக்கின்ற பகுதிகளில் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் அந்த ஏரியை ஆய்வு செய்து வருவதாக சொல்லப்படுகிறது.