நடிகர் ஆதி நடிக்கும் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகை! 

0
278
#image_title

நடிகர் ஆதி நடிக்கும் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகை! 

நடிகர் ஆதி நடிக்கும் சப்தம் படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அறிவழகன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஈரம். தமிழ் சினிமாவில் வெளியான ஹாரர் திரைப்படங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து பெரும் வரவேற்பு பெற்றது. இதில் நடிகர் ஆதி, சிந்துமேனன், நந்தா துரைராஜ் மற்றும் சரண்யா மோகன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இதைப் போலவே நடிகர் ஆதி, இயக்குனர் அறிவழகன் மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோரது கூட்டணியில் மீண்டும் ஒரு திகில் கதையம்சம் கொண்ட திரைப்படம் உருவாகி வருகிறது. சப்தம் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக  மூணார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்  நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த படம் தொடர்பான அப்டேட்களை அவ்வப்போது படக்குழு வெளியிட்டு வருகிறது.

அதன்படி சப்தம் படத்தில் லட்சுமி மேனன் இணைந்துள்ளதாக படக்குழு புதிய அப்டேட்டை அறிவித்துள்ளது. கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான நடிகையான லட்சுமிமேனன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ள அவர் பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி-2 விலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.