பஸ் விடமாட்டிங்களாயா? கதறும் அடித்தட்டு மக்கள்! கண்டுகொள்ளாத அரசு!

0
65

பஸ் விடமாட்டிங்களாயா ? கதறும் அடித்தட்டு மக்கள்! கண்டுகொள்ளாத அரசு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து இன்றுவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தான் உள்ளது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது தமிழக அரசு.

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், அதற்கான தடுப்பூசிகள் ,தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க முடியாதது வருத்தத்திற்குரியது.ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் உள்ளுக்குள் கலங்கும் அடித்தட்டு மக்களின் நிலை என்ன?

அத்தியாவசியத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்து கொள்ளாத வகையில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதற்கு யார் காரணம்?

தனிநபர் கடன் கட்டும் தேதிகள் தள்ளி வைக்கப் பட்டாலும் ,EMI கட்டப்படும் தேதிகள் நீட்டிக்க பட்டாலும் அடித்தட்டு மக்கள் மிகவும் வருத்தப்பட்டு கொண்டுதானிருக்கிறார்கள்.
நியாயவிலைக் கடைகளை மட்டுமே நம்பியிருக்கும் பல்வேறு குடும்பங்களுக்கு அரசு செய்யும் இந்த சின்ன உதவி தகுமா?

வாழ்வாதாரத்தை இழந்து வீட்டில் இருக்கும் அவர்களின் நிலை என்ன?
அரசு கொடுக்கும் இலவச அரிசி, பருப்புகள், எண்ணெய் இரண்டு வாரங்கள் மட்டுமே வரும் நிலையில் அடுத்த இரு வாரங்களுக்கு மக்கள் என்ன செய்வர்?

கொரோனா வைரஸ் தொற்று ஒரு காரணியாக இருந்தாலும் மக்கள் நலம் பெற வாழ அரசு ஒன்றே முடிவெடுக்க முடியும்.பேருந்துகளை மட்டுமே நம்பி வேலைக்குச் செல்லும் மக்களின் நிலை குறித்த அரசாங்கம் ஏன் பதில் அளிக்கவில்லை?

ஊரடங்கில் வேலைகள் பறி போய் வீட்டில் மன அழுத்தத்துடன் அமர்ந்திருக்கும் அவர்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது?

பேருந்துகள் இல்லாததால் பல பேர் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் பணிகளை இழந்து வீட்டில் உள்ளனர் அது அவர்களுக்கு மிகப் பெரிய மன அழுத்தத்தினை தருகிறது. என்னதான் பொழுதுபோக்காகக் தொலைக் காட்சிகளை பார்த்து வந்தாலும், உள்ளுக்குள் அவர்களுக்கு நாம் வேலைக்குச் செல்லவில்லை? வாழ்வாதாரத்தை இழந்து உள்ளோம்? அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்வோம் ? என்று கதறுகின்றனர்.

கடன்காரன் இருசக்கர வாகனம் அவனை நிலைகுலைய வைப்பதை அரசு எங்கே அறியப் போகிறது! வட்டி, கந்து என பல இடங்களில் கடன் வாங்கி வட்டிக்கு வட்டி ஏறி தற்கொலைக்கு செல்லும் அளவிற்கு கொரோனவைரஸ் அவர்களை தள்ளி உள்ளது!

அடித்தட்டு மக்கள் புலம்பும் புலம்பல்களை அரசு காதுகொடுத்து கேட்கவேண்டும். அவர்கள் வாழ்வாதாரம் சிறக்க ஒரு சிறு உதவியாக அரசாங்கம் செய்ய வேண்டும். வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட ஒரு வழி வகுக்க வேண்டும்!

author avatar
Kowsalya