வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து மக்களை கவர்ந்த பாமக வேட்பாளர்!

0
74

வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து மக்களை கவர்ந்த பாமக வேட்பாளர்!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதோடு தமிழகம் முழுவதும் மூலைமுடுக்கெல்லாம் அரசியல் கட்சி தலைவர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.மக்கள் மனதை கவர்வதற்காக பல வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சிலர் பொதுமக்களின் வீட்டிற்கு சென்று துணிகளை துவைத்து கொடுத்து வாக்கு கேட்பது, காலில் விழுந்து வாக்கு கேட்பது, என இவ்வாறு பல வித்தியாசமான முறையில் வாக்குகளை சேகரித்து வருகிறார்கள் வேட்ப்பாளர்கள்.

இதுபோன்ற வேட்பாளர்களின் செயல்கள் பொதுமக்களிடையே வரவேற்பையும் பெற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் இதுபோன்ற செயல்களை விமர்சனம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். மக்களிடம் வாக்கு கேட்பதற்காக மட்டுமே இதுபோன்ற விளம்பர செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் அதன் பிறகு அவர்களை தொகுதியின் பக்கமே பார்க்க முடியாது என்ற கருத்தும் நிலவி வருகிறது.

அந்த வகையில், பூந்தமல்லி சட்டசபை தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் ராஜமன்னார் அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகளை லாரியில் ஏற்றிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றார். அதாவது அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்ற ஒரு வருடத்திற்கு ஆறு எரிவாயு சிலிண்டர் இலவசம் மற்றும் விலையில்லா வாஷிங்மெஷின் போன்றவற்றை லாரிகளில் வைத்துக்கொண்டு மக்கள் பார்வைக்கு எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார் இது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து இருப்பதாக சொல்கிறார்கள்.