தமிழகத்தில் பொன்னியின் செல்வன் முதல் வசூல்….  பீஸ்ட், வலிமை படங்களை முந்தியதா?

0
132

தமிழகத்தில் பொன்னியின் செல்வன் முதல் வசூல்….  பீஸ்ட், வலிமை படங்களை முந்தியதா?

பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்திய சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று உலகம் முழுவதும் இந்த படம் ரிலீஸானது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்புக் கிடைத்தாலும், தமிழகத்தில் அபரிமிதமான மக்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். இதனால் நேற்று தமிழகம் முழுவதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது.

இந்நிலையில் நேற்று முதல் நாளில் தமிழ்நாட்டில் சுமார் 26.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டில் வெளியான வலிமை மற்றும் பீஸ்ட் படங்களுக்கு அடுத்த படியாக அதிக வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் இடம்பிடித்துள்ளது.

உலகம் முழுவதும் இந்த திரைப்படம் சுமார் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து வரும் விடுமுறை நாட்களில் இதே வசூல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.