நாளை முதல் தொடங்கும் பொங்கல் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட தகவல்!

0
169
Pongal special bus starting tomorrow! Information released by the government!
Pongal special bus starting tomorrow! Information released by the government!

நாளை முதல் தொடங்கும் பொங்கல் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட தகவல்!

தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்வி பயில்பவர்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்தது. கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று மக்களின் வசதிக்கேற்ப சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது.கூட்ட நெரிசலை தடுப்பதற்காக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டது.

மக்கள் அதிகளவு பயணம் செய்வதினால் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.அதற்காக ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நான்கு நாட்கள் விடுமுறை என்பதினால் பொங்கல் பண்டிகையை  சொந்த ஊரில் கொண்டாட செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மாதமே இதற்கான முன்பதிவு தொடங்கி விட்டது.ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்ந்துள்ளதால் அரசு பேருந்துகளில் இருக்கைகள் முதலில் நிரம்பியது.அதனையடுத்தே ஆம்னி பேருந்துகளில் இருக்கைகள் நிரம்ப தொடங்கியது.இந்நிலையில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் கோயம்பேடு, கே.கே.நகர் மாதாவரம், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய ஐந்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றன.பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கு 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K