டோக்கன் களில் தலைவர்கள் படத்திற்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி!

0
119

பொங்கல் பரிசு தொகை கொடுக்கப்படும் டோக்கன்களில் தலைவர்களுடைய புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி எல்லா ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2500 தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று டிசம்பர் மாதம் 19ஆம் தேதி சேலத்தில் ஆரம்பித்த முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் முதலமைச்சர் பரிசுத்தொகை அறிவித்ததற்கு எதிர்ப்பும், ஆதரவும், கிளம்பிய வண்ணம் இருக்கின்றன.

இந்தநிலையில், பரிசு தொகைக்காக கொடுக்கப்படும் டோக்கன்களில், அதிமுக தலைவர்களின் புகைப்படம் இடம்பெற்ற டோக்கன்கள் இரண்டு இடங்களில் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டதாகவும் கட்சியினர் ஆர்வக்கோளாறு காரணமாக வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்த தகவலை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் இதுகுறித்து அனைத்து நியாயவிலை கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

இந்த நிலையில், வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு முன்பாக நேற்றையதினம் மறுபடியும் விசாரணைக்கு வந்தது. அந்த நேரத்தில் தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்ட சுற்றறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அரசு கொடுக்கும் டோக்கன்களில் எந்த ஒரு கட்சித் தலைவர்களின் புகைப்படங்களும் இடம் பெறக்கூடாது என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள்.