பொங்கல் பரிசு தொகுப்பு! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!

0
146
Pongal gift set! The new update released by the government!
Pongal gift set! The new update released by the government!

பொங்கல் பரிசு தொகுப்பு! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!

பொங்கல் திருநாளை தமிழர்களுக்கே உரிய நாளாக கூறுகின்றனர்.மேலும் பொங்கல் தினத்தில் தான் அனைத்து தமிழ் மக்களும் உழவர்களுக்கு நன்றி கூறும் விதமாக கொண்டாடி வருகின்றனர்.பொதுவாக எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவருக்கும் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது ரொக்கம் வழங்காமல் 21 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை பரிசாக வழங்கினர்.அதனால் அந்த பொருட்கள் சுகாதாரமற்றதாக இருந்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

அதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பரிசாக வேட்டி சேலை வழங்குவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனையின் முடிவில் பொங்கலுக்கு பல வண்ணங்களில் சேலை வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது.மேலும் வேட்டி சேலை வழங்கும் பணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில்  ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ 1000 ரொக்கம் பணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.அதுமட்டுமின்றி அதனுடன் சேர்த்து ஒரு சில மளிகை பொருட்களும் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

அரிசி ,சர்க்கரை உள்ளிட்ட பொருட்களுடன் ரூ 1000 ரொக்கம் வழங்க வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகின்றது.இதற்காக அதிகரப்பூர்வ உத்தரவு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தொடங்கி வைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
Parthipan K