அதிமுகவின் தேர்தல் வியூகத்தை கண்டு அசந்து போன திமுக! அடுத்து என்ன செய்யப் போகிறது!

0
39

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் ஒரு சில வினாக்கள் இருந்து வரும் காரணத்தால், மத்திய அரசு தமிழக அரசின் மீது பாராமுகமாக இருந்து வருகிறது அதனை சரிக்கட்டும் விதமாகவே தற்போது இரண்டு நாள் பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

அதிமுக சார்பாக கூட்டணி வேலைகளை சென்ற ஆகஸ்ட் மாதமே தொடங்கி விட்டதாக சொல்கிறார்கள் .ஆனால் கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகள் எதுவும் நடக்கவில்லையாம். அதன் காரணமாக சரி செய்தால் போதும் மற்ற கட்சிகள் அனைத்தும் சுலபமாக வந்துவிடும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நினைப்பதாக தெரிவிக்கிறார்கள்.

அதற்காக தான் மிகவும் அவசர அவசரமாக முதல்வர் டெல்லிக்குச் சென்று இருப்பதாக சொல்கிறார்கள். தன்னுடைய பயணத்தின் முக்கிய அம்சமாக நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசியிருக்கிறார். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரண்டு தரப்பிலும் கூட்டணி தொடர்பாகவே முழுக்க முழுக்க பேசியதாக தெரிகிறது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் அமித்ஷா தமிழகம் வந்தபோது எந்தெந்த ரிப்போர்ட்டுககளை கொடுத்தாரோ, அதை தான் இப்பொழுதும் பேசியிருப்பதாக தெரிகிறது.

அதிமுகவின் கூட்டணியில் தமிழ்நாட்டில் இன்னும் சில கட்சிகள் சேர இருப்பதால், கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக ஒரு குழுவை அமைத்து ஆலோசித்து கொள்ளலாம் என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார். அதற்கு மத்திய அமைச்சரும் இசைவு அளித்து இருப்பதாக சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சியான திமுகவை விட நாங்கள் உங்களுக்கு நம்பிக்கையாக இருப்போம் என்றும் உறுதியளித்திருக்கிறார் முதலமைச்சர். எதிர்வரும் தேர்தலில் நாம் இருவரும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் நிச்சயமாக திமுகவை வீழ்த்தி விடலாம் எனவும் தெரிவித்திருக்கிறார். அதற்கு அமிர்ஷா தரப்பில் தமிழகத்திலே கருத்துக்கணிப்புகள் உங்கள் அரசாங்கத்திற்கு எதிராக இருக்கிறது என கேட்டிருக்கிறார்.

முதல்வர் தரப்பில் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நடைபெற்ற கருத்துக் கணிப்பில் கூட அநேக கருத்துக்கணிப்புகள் அதிமுகவிற்கு எதிராகவும் திமுகவிற்கு ஆதரவாகவும் தான் இருந்தது. ஆனாலும் கூட தேர்தலின் முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாக இருந்தது ஆகவே கருத்துக் கணிப்பை மட்டும் வைத்து எதையும் முடிவு செய்துவிட வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

அதோடு தமிழ்நாட்டிலே நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி, உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றிகள் அனைத்தையும் சுட்டிக்காட்டி பேசிய முதல்வர் எங்களுக்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் தேர்தல் பணியாற்ற நீங்கள் முடிவெடுத்தால் அதிமுக மட்டுமல்ல உங்கள் கட்சி கூட கணிசமான இடங்களை பெறலாம் என்று தெரிவித்திருக்கிறார். இவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொண்ட உள்துறை அமைச்சர் மகிழ்ச்சியாக எடப்பாடிக்கு விடை கொடுத்ததாக தெரிகின்றது.