பொள்ளாச்சி வழக்கு! பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்!

0
72

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிற குற்றவாளிகளுக்கும், அதிமுகவின் பெரும் புள்ளிகளுக்கும் இருக்கின்ற தொடர்புகளையும், விசாரிக்கவேண்டும் என்று திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிற அருளானந்தன் அதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட இருக்கிறார். 2019 ஆம் வருடம் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச காணொளி எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை அடுத்து வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு ஒரு திடீர் திருப்பமாக, வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் உட்பட மூன்று நபர்களை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிற அருளானந்தம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக நகர மாணவரணி செயலாளர் பதவியிலிருந்து அருளானந்தம் நீக்கப்படுவதாக, அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ,ஆகியோர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக தன்னுடைய வலைதளப் பக்கத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பெண்களுக்கு அதிகாரம் கொடுத்தோம் என்று அரசு பணத்தில் அடிமைகள் விளம்பரம் செய்து வருகின்ற நிலையில், அதிமுக நகர மாணவரணி செயலாளர் உள்பட 3 பேர் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி இருக்கிறார்கள். குற்றவாளிகளை பாதுகாப்பது தான் அதிகாரமளித்தலா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதிமுகவின் முக்கிய புள்ளிகளுக்கும், பொள்ளாச்சி வழக்கில் தொடர்பு இருக்கிறது என்று தலைவர் தெரிவித்தார். கைதான குற்றவாளிகளுக்கும், அதிமுகவில் முக்கிய புள்ளிகளுக்கும், இருக்கின்ற தொடர்புகளையும் விசாரணை செய்ய வேண்டும் .அப்போதுதான் பாதிக்கப்பட்டோருக்கு முழுமையான நீதி கிடைக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார் .