மழையை வைத்து அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள்! தண்ணீரில் தத்தளிக்கும் பொதுமக்கள்!

0
85

தமிழ்நாட்டில் எல்லா விஷயங்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பது, அதனை வைத்து அரசியல் செய்வது உள்ளிட்டவை வாடிக்கையாகிவிட்டது. அது இந்த மழை காலங்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்க ஆனால் அரசியல் கட்சியினர் வழக்கம் போல தங்களுடைய பாணியில் இந்த மழையை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களின் மீது கவனம் செலுத்துவதை விட இந்த மழையை வைத்து அரசியல் செய்வதை தான் முழு நேர வேலையாக செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தலைநகர் சென்னையில் சென்ற 6ம் தேதி கனமழை பெய்தது குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து கொண்டது, பல பகுதிகளில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து அதன் காரணமாக, பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

முதல்-அமைச்சர் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மழைநீரை வெளியேற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் உள்ளிட்டவற்றை வழங்கினார், அதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ஆய்வு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

திராவிடர் முன்னேற்றக் கழக அரசு மழைநீர் வடிகால்களை தூர்வார முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளாதது தான் சென்னை தண்ணீரில் மிதப்பதற்கு முக்கிய காரணம் எனவும், குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு பதில் தெரிவித்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் பத்து வருடங்களில் அதிமுகவின் சார்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் கோடிக்கணக்கான ரூபாய் நிதி பெற்றிருக்கிறார்கள் என தெரிவித்து இருக்கிறார்.

திட்டப் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை, முறைகேடு நடந்திருக்கிறது. இதனை விசாரணை செய்ய விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். இதனால் அரசியல் தமிழகம் முழுவதும் பற்றிக்கொண்டது அதிமுக ஆட்சியில் மழைநீரை வெளியேற்றுவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் அப்போது மழை நீர் தேங்க வில்லை திமுக ஆட்சி முன்னேற்பாடு எதுவும் செய்யாமல் இருந்ததால் இவ்வாறு ஒரு நிலைமை ஏற்பட்டு இருக்கிறது என்று அதிமுக தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது. அதிமுக சார்பாக எந்தவிதமான பணியின் மேற்கொள்ளாததால் இந்த நிலை என்று திமுகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்கள் சமூக வலைத்தளங்களில் விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

இந்த இரு கட்சிகளுக்கு இடையில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை மழை பாதிப்புகளை பார்வையிட்டு திட்ட உதவிகளை பொது மக்களுக்கு வழங்கினார் அவர் கட்சியினரின் வேண்டுகோளை ஏற்று படகில் செல்ல முழங்கால் தண்ணீரில் அவர் படகில் சென்றதாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் திமுக சார்பாக பறக்கவிடப்பட்டன. அதற்கு பதில் கொடுக்கும் விதமாக வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற முதலமைச்சர் இடம் பெண் ஒருவர் சாப்பாடு வேண்டாம் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கும் காணொளி ஒன்றும், இளைஞர் ஒருவர் விடியல் விடியல் என்றீர்கள் எதுவும் வரவில்லை என்று தெரிவிக்கும் வீடியோவும் வெளியானது.

அதோடு திமுக நாடக கம்பெனி என்ற ஹேஸ்டேக் டுவிட்டர் வலைதள பக்கத்தில் வைரலாக பரவ செய்தார்கள். இப்படி அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் தங்களுடைய ஸ்டைலில் அரசியல் செய்ய பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நான்கு தினங்களுக்கு மேல் ஆகியும் தண்ணீர் வடியாத வேதனையில் இருக்கிறார்கள்.

எல்லோருடைய பார்வையும் சென்னையில் இருக்க மழையால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்ட மக்கள் எங்களை யாரும் கண்டு கொள்ளவில்லையே என வருத்தத்தில் இருக்கிறார்கள். இயற்கை பேரிடர் ஏற்படும்போது அதை வைத்து அரசியல் கட்சியினர் அரசியல் செய்யாமல் பொது மக்களுக்கு உண்மையாக உதவிபுரிய முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.