கேள்விக்குறியான ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை?

0
193
O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!
O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!

கேள்விக்குறியான ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை?


எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

2017 ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் தனது முதலமைச்சர் பதவி ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அவர் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் சென்று தியானம் செய்து தர்மயுத்தம் என்று அறிவித்தார். அதை தொடர்ந்து சசிகலா அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறைச்சாலை சென்றார்.

அதன் காரணமாக எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் முதல்வராக பொறுப்பேற்று ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வரை முதல்வராக தொடரும் நிலை ஏற்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் தனித்து நின்றார், பிறகு மீண்டும் அதிமுக கட்சியுடன் இணைந்தார் பிறகு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுடன் சேர்ந்து அதிமுக கட்சியை வழிநடத்தினார். தலைமை ஒருங்கிணைப்பாளர், இனை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். அப்பொழுது அனைவருக்கும் இடையே பனிப்போர் தொடங்கியது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சியமைத்தது. அதிமுக எதிர்க்கட்சியானது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி எடப்பாடி கே. பழனிசாமி அவர்களிடம் சென்றது. துணைத்தலைவர் பதவி பன்னீர்செல்வம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.


அப்போது இருவருக்கும் இடையே விரிசல் பெரிதாக தொடங்கியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொதுக்குழு நடைபெற்ற போது இருவருக்கும் மோது போக்கு பெரிதாகி விஸ்வரூபம் எடுத்தது. கட்சி இரண்டாக உடைந்தது.

அதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வம் அதிமுகவை சொந்தம் கொண்டாடி உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் என பல்வேறு நிலைகளுக்கு சென்று போராடினார். ஆனால் இறுதியாக உச்ச நீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் எடப்பாடி கே பழனிசாமி அவர்களை அதிமுகவின் பொதுச்செயலாளர் அங்கீகரித்தது.

இதையடுத்து மல்லுக்கட்டி நின்ற ஓ. பன்னீர் செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.


வரும் 24ம் தேதி திருச்சியில் மாபெரும் கட்சி மாநாட்டை ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் மதுரையில் மாபெரும் கட்சி மாநாட்டை எடப்பாடியார் தரப்பினரும் ஏற்பாடு செய்துள்ளனர்.

எது எப்படியோ! ஒரிரு தினங்களில் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் தரப்பினர் செய்தியாளர் சந்திப்பு நடத்தி அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து தெரிவிப்பார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.