Connect with us

Breaking News

விஷ மாத்திரை சாப்பிட்டு போலீஸ்காரர் தற்கொலை! செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்! 

Published

on

விஷ மாத்திரை சாப்பிட்டு போலீஸ்காரர் தற்கொலை! செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்! 

மதுவில் விஷ மாத்திரையை கலந்து போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது. நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

Advertisement

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

தேனி மாவட்டம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் வயது 38. இவரது மனைவி அனிதா வயது 32. இவர்களுக்கு காவியா வயது 11 என்ற மகளும் நவ்தீஷ் வயது 9 என்ற மகனும் உள்ளனர். ஜெகன் மங்கலம் காவல் நிலையத்தில் குற்ற பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவர் குடும்பத்துடன் இடுவாய் பகுதியில் வசித்து வருகிறார்.

Advertisement

கடந்த சில தினங்களாகவே ஜெகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் வழக்கம் போல் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய ஜெகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஜெகன் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின் தென்னை மரத்திற்கு வைக்கப்படும் விஷ மாத்திரையை மதுவில் கலந்து குடித்துவிட்டு தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்களும் மங்கலம் காவல்துறையினரும் அவர் இருக்கும் இடத்தை தேடிச் சென்றனர்.

Advertisement

அங்கே ஜெகன் மயங்கி நிலையில் கிடந்துள்ளார் உடனே அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெகன் காலை உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பப் பிரச்சினையில் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement