Connect with us

Breaking News

பாலியல் புகாரில் உண்மையை கூற கூடாது.. மாணவிகளை மிரட்டிய காவல்துறையினர்..!

Published

on

பாலியல் புகாரில் ஆசிரியருக்கு எதிராக சாட்சி அளிக்க கூடாது என காவல்துறையினர் மிரட்டுவதாக மாணவி புகார் அளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றியவர் ஆரோக்கிய அருள்தாமஸ். இவர் கடந்த 2019ம்ஆண்டு அந்த பள்ளியில் படித்த 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி பல மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டனர்.

Advertisement

ஒரு கட்டத்தில் அவரின் செயல்களை தாங்க முடியாத மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில், 17ம் தேதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அந்த மாணவி ஆசிரியர் மற்றும் காவல்துறையினர் தன்னை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபடவில்லை என கூற சொல்லியதாக நீதிபதிகளிடம் மாணவி தெரிவித்தார்.மேலும், மற்றொரு சாட்சியான மாணவியின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதால் அந்த மாணவிக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

Advertisement

இதனை அடுத்து, மாணவிகளுக்கு மிரட்டல் அளித்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினரே மாணவிகளை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement