உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு!

0
67

உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு!

கேரளா மற்றும் கன்னியாகுமரி அருகே உள்ள களியக்காவிளையில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அவர்களின் குடும்பத்தினரிடம் 1 கோடி ரூபாய் நிவாரண தொகையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனைச் சாவடியின் பணியின் போது சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றாவளிகளை பிடிக்க தமிழக காவல்துறையின் சார்பாக 10 தனிப்படைகள் உருவாக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது.

உதவி ஆய்வாளரின் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், தமிழகத்தில் பெருமளவு பேசப்படவில்லை என்பதே உண்மை. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பணியின் போதே உயிர்விட்ட வில்சன் அவர்களின் இறப்பு பலருக்கு வருத்தம் தரக்கூடிய சம்பவமாகும்.

author avatar
Jayachandiran