மணல் கொள்ளையில் ஈடுபட்ட திமுக நிர்வாகிக்கு துணைபோன காவலருக்கு கிடைத்த தண்டனை!

0
83

மணல் கொள்ளையில் ஈடுபட்ட திமுக நிர்வாகிக்கு துணைபோன காவலருக்கு கிடைத்த தண்டனை!

திருப்பத்தூர் அருகே கோட்டை இருப்பை சேர்ந்தவர் சண்முகவடிவேல்.இவர் திமுக ஒன்றிய குழு தலைவராக உள்ளார்.இவர் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும்,கொள்ளையடித்த மணலை கண்டரமாணிக்கம் சாலையிலுள்ள அவருக்கு சொந்தமான தனியார் தோட்டத்தில் பதுக்கி வைத்துள்ளதாகவும்,
வட்டாட்சியர் ஜெயலட்சுமிக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் கடந்த வாரம் வட்டாட்சியர் ஜெயலட்சுமி அந்த தோட்டத்தை சோதனையிட்டார்.

சோதனையில் 150 லோடு சவடு மண்ணும் 50 லோடு மணலும் பதுக்கிவைத்திருந்தது அம்பலமானது.பின்னர் இந்த தோட்டத்திற்கு சீல் வைத்ததோடு,சண்முகவடிவேல் மீது திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் வட்டாட்சியர் ஜெயலட்சுமி புகார் அளித்தார்.ஆனால் இது குறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஜெயமணி என்பவர் மணல் கொள்ளையில் ஈடுபட்ட வரை கைது செய்யவில்லை.

இதையடுத்து,மணல் கொள்ளையில் ஈடுபட்டவரை கைது செய்ய தவறிய ஜெயமணியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோகநாதன் பரிந்துரையின் அடிப்படையில், பணியிடை நீக்கம் செய்ய ராமநாதபுரம் சரக டிஐஜி
மயில்வாகணன் அவர்கள் உத்தரவிட்டார்.

மேலும்,மணல் திருட்டில் ஈடுபடுவோருக்கு காவல்துறை துணை போனால் இது போன்று துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஐஜி மயில்வாகனன்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

author avatar
Pavithra