3 வயது குழந்தையை காரில் பூட்டிய போலீசார்! அப்படி என்ன ஆத்திரம்?

0
83
Police lock 3-year-old child in car! What rage like that!
Police lock 3-year-old child in car! What rage like that!

3 வயது குழந்தையை காரில் பூட்டிய போலீசார்! அப்படி என்ன ஆத்திரம்?

கேரள மாவட்டத்தில் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தில் 3 வயது சிறுமியை காரில் அடைத்து வைத்ததாகவும், அந்த சிறுமி தேம்பித் தேம்பி, அழுத போதும் போலீசார் கண்டுகொள்ளாமல் காரின் சாவியை எடுத்துக் கொண்டு போனதாக புகார் ஒன்று தற்போது பதிவாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி அந்த இடத்தில் சிபு என்பவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகளுடன் காரில் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வாகன பரிசோதனைக்காக நின்ற போலீசார் அதிவேகமாக சென்றதன் காரணமாக சிபுவின் காரை மடக்கி நிறுத்தினர். மேலும் அவர் அதிவேகமாக வந்ததன் காரணமாக 1500 ரூபாய் அபராதமும் விதித்தனர். அந்த அபராதத் தொகையை செலுத்திய போது, சிபு நிறைய கார்கள் அதிவேகமாக செல்கிறதே, அதையெல்லாம் ஏன் பிடிக்கவில்லை என கேள்வி கேட்டுள்ளார்.

அதனால் ஆத்திரம் தலைக்கேறிய போலீசார் காரின் கதவுகளை பூட்டி சாவியை எடுத்து வைத்துக் கொண்டனர். அவரது மனைவி மற்றும் சிபு காருக்கு வெளியே நின்ற நிலையில், அவர்களது குழந்தை மட்டும் காருக்குள் தனியாக இருந்தது. அந்த சமயத்தில் காரின் கதவுகளை மூடியதன் காரணமாக குழந்தை பலமாக அழுக ஆரம்பித்தது. குழந்தை அழுவது பற்றி போலீசாரிடம் சொல்லியும், அவர்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை.

போலீசாரோ அதை கண்டுகொள்ளவே இல்லை. மேலும் சார் சீஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்கள். இதைதொடர்ந்து குழந்தை அழுவதை தாய் அஞ்சனா வீடியோவும் எடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் சிபு அவர்களை தாக்கியதாக வழக்கு பதிவு செய்ய முயற்சி செய்தனர். ஆனால் அந்த வழியே சென்ற பயணிகள் அங்கு கூடி நியாயம் பேசியதன் காரணமாக போலீசார் அவர்கள் மீது எந்த வழக்கும் போடாமல் அவர்களை விடுவித்து விட்டனர்.

அந்த வீடியோ எடுத்த அந்த தாய் இது பற்றி கூறும் போது, போலீசாருக்கு பயந்துதான்  இதுவரை எதுவும் செய்யாமல் இருந்தேன். ஆனால், ஆற்றிங்கல் பகுதியில் பெண் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்ததை மீடியாக்களில் வெளியானது. அதன் காரணமாக தைரியமாக தற்போது இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளேன் என்றார். எனவே  பாலராமபுரம் போலீஸ் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.