பள்ளி நிறுவனர் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்த காவல்துறை! 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நிலையில் இது 6!

0
79
Police have registered another case against the school founder! This is 6 while filing a 300 page indictment!
Police have registered another case against the school founder! This is 6 while filing a 300 page indictment!

பள்ளி நிறுவனர் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்த காவல்துறை! 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நிலையில் இது 6!

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் அமைந்துள்ளது சுஷில் ஹரி பள்ளி. இதில் அதன் நிறுவனர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அங்கு பயின்ற முன்னாள் மாணவிகள் சிலர் குற்றச்சாட்டை அடுக்கினார்கள். அதுவும் இணையதளத்தின் மூலம் புகார்களை பதிவு செய்தனர். அதன் காரணமாக அந்த பள்ளியின் நிறுவனர் ஆக இருக்கும் சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட போது அவர் ஒரு அறையில் இருந்ததாகவும், அங்கு அனைத்தும் மிகவும் பிரம்மாண்டமாகவும் அமைக்கப்பட்டிருந்தது என பார்ப்போர் தெரிவித்தனர். அதன் காரணமாக அவர் பல பெண்களையும் ஏமாற்றியதோடு  மாணவிகளையும், அவர்களது பெற்றோர்களையும் ஏமாற்றியதும் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அவர் இது போல பல சம்பவங்களை அரங்கேற்றியுள்ளார் என்பதும் விசாரணையின் மூலம் தெரியவந்தது. தற்போது அவரது அறையை திறக்க வேண்டி கோர்ட்டில் ஒரு மனுவையும் சிபிசிஐடி போலீசார் கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அவர் மீது சிபிசிஐடி போலீசார் 3 போக்சோ வழக்குகளை பதிவு செய்தனர். இதையடுத்து கடந்த மாதம் அந்த நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு மற்றும் ஒரு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இரண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் மீது உள்ள வழக்குகளில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது போக்சோ வழக்குகளுக்கான குற்றப் பத்திரிகைகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் தற்போது அவர் மீது மேலும் ஒரு பாதிக்கப்பட்ட பள்ளியின் முன்னாள் மாணவி அவரால் பாதிப்புக்கு உள்ளான மாணவி துணிந்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அந்த பாபா மீது ஐந்தாவது வழக்கையும் சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் இதுவரை அவர் மீது 5 போக்சோ வழக்குகள் மற்றும் ஒரு பெண் வன்கொடுமை வழக்கு என மொத்தம் ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தான் தவறுகள் குறையும்.  அது எப்போது நடைபெறும் என அனைவரும் வழிமீது விழி வைத்து காத்து இருக்கிறோம்.