எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது நான்கு பிரிவுகளின் கீழ் பதிவு செய்த காவல்துறையினர்!

0
57

நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் மாநில அரசை கண்டித்து அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் என்னாச்சு, என்னாச்சு, தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு ஸ்டாலின் அரசை நீட் தேர்வை ரத்து செய்வதாக சொன்னீர்களே சொன்னது என்னாச்சு என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட 505 வாக்குறுதிகளில் முக்கியமான நீட் தேர்வு ரத்து மற்றும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, அதோடு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கு 100 ரூபாய் மானியம் உள்ளிட்டவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், இன்று காலை சேலம் மாவட்டம் சூரமங்கலம் காவல்துறையினர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 90 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். இவர்கள் மீது நோய்த்தொற்று கட்டுப்பாட்டை மீறி அரசின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்தது, உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. என்று சொல்லப்படுகிறது. இதைத்தவிர சேலம் மாநகராட்சி முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் செய்த அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.